Home Cinema News அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் செம மாஸான டீசர்!

அல்லு அர்ஜுனின் பர்த்டே ஸ்பெஷல்… வெளியானது ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் செம மாஸான டீசர்!

by Sivaanantham RB

டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டுபவர் அல்லு அர்ஜுன். இப்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படமான ‘புஷ்பா 2: தி ரூல்’-ஐ முன்னணி இயக்குநர் சுகுமார் அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். 

இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபஹத் ஃபாசிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், மிக முக்கிய கதாபாத்திரங்களில் தனஞ்செய், ராவ் ரமேஷ், சுனில், அனுசுயா பரத்வாஜ், அஜய் கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8-ஆம் தேதி) அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

செம மாஸான இந்த டீசர் அல்லு அர்ஜுன் ரசிகட்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.