Home Cinema News ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசர் ரிலீஸுக்கு நாள் குறித்த அல்லு அர்ஜுன்!

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தின் டீசர் ரிலீஸுக்கு நாள் குறித்த அல்லு அர்ஜுன்!

by Sivaanantham RB

டோலிவுட்டில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டுபவர் அல்லு அர்ஜுன். இப்போது இவர் கைவசம் ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் தமிழ் இயக்குநர் அட்லீயின் படம் என இரண்டு படங்கள் மட்டுமே இருக்கிறது.

இதில் அட்லீ இயக்கும் படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கவிருக்கிறார். இதற்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளாராம். மிக விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருமாம்.

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தை முன்னணி இயக்குநர் சுகுமார் அதிக பொருட்செலவில் இயக்கி வருகிறார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனாவும், வில்லனாக ஃபஹத் ஃபாசிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படத்தை இந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் ரிலீஸாகப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.