பிரபல தென்னிந்திய நடிகையான நடிகை அமலாபால் தமிழில் ‘சிந்து சமவெளி’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ‘மைனா’ உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்து திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள அமலாபால் தற்போது இரண்டாவது திருமணம் செய்து, தாயாகி, சினிமாவை விட்டு ஒதுங்கிவாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில் அமலாபால் மீது பிரபல மேக்கப் கலைஞர் ஒருவர் கூறியிருக்கும் குற்றசாட்டு சினிமா உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது.
பிரபல மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணரான ஹேமா, ஏராளமான முன்னணி நடிகைகளுடன் பணிபுரிந்து வருகிறார். அவர் சமீபத்தில் தனது மேக்கப் அனுபவம் குறித்து இந்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது தான் பணியாற்றிய முன்னணி நடிகைகளுடன் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசியுள்ள அவர் தனக்கு நடிகை அமலா பாலுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பற்றி மனம்திறந்து பேசியிருக்கிறார்.
‘’ஒரு படத்துக்கான படப்பிடிப்பில் நடிகை அமலாபாலுடன் பணிபுரிந்தேன். அப்போது கடுமையான வெயில் காலம். படப்பிடிப்பு நடைபெற்ற இடத்தில் நிழலில் ஒதுங்க கூட இடமில்லை. அதனால் நானும் என்னுடன் பணி புரிந்த சில பெண்களும் மிகவும் சிரமப்பட்டோம். அப்போது ஒரு கேரவேனுக்குள் சென்று உட்கார்ந்து கொண்டோம். ஆனால், நாங்கள் உட்கார்ந்த கொஞ்ச நேரத்திலேயே அமலா பால் தனது மேனேஜரை அழைத்து எங்களை வெளியேற்றும்படி சொல்லி அனுப்பினார். இதுமட்டுமல்ல பல்வேறு சம்பவங்கள் இப்படப்பிடிப்பு முழுவதும் எனக்கு அவருடன் ஏற்பட்டது. நான் பல முன்னணி நடிகைகளுடன் பணியாற்றியுள்ளேன். அவர்கள் அனைவரும் எங்களிடம் கனிவாக நடந்து கொள்வார்கள். ஆனால் அமலாபால் மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். ஒரு படப்பிடிப்பில் மிக முக்கியமானவர்கள் சிகையலங்கார நிபுணர்கள் மற்றும் மேக்கப் கலைஞர்கள்தான். அவர்கள்தான் நடிகர்களை மிகவும் அழகாக காட்டுகிறார்கள் ஆனால் அவர்களுக்கான மரியாதையும், அங்கீகாரமும் சரியாக, கிடைப்பதில்லை’’ என்று அந்தப்பேட்டியில் ஹேமா பேசியிருக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]