இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, ராகுல் பொஸ் நடிக்கும் படம் ‘Amaran’. இந்த படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையை சேந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிப்பதாக 2022ல் அறிவித்த நிலையில் அதை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான Raaj Kamal Films International தயாரிக்கிறது.
ராஜ்குமார் பேருயசாமி இயக்கும் இப்படத்தில் ‘ஹே மின்னலே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் இசையில் 700 வது பாடலான இது, பாடகர் ஹரிச்சரன் மற்றும் பாடகி ஸ்வேதா மோகன் குரலில் ஒரு காதல் பாட்டாக வெளியாகியுள்ளது. கவிஞர் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் ஒரு அழகிய பாடலை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் கமல் ஹாசன் பாடியுள்ளார்!
மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் எப்படி அவரின் மனைவியை சந்தித்து காதலில் விழுகிறார் என்பதை பற்றிய பாடல் தான் ‘ஹே மின்னலே’. இந்து ரெபேக்கா வர்கிஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி உடைய கதாபாத்திரம் இப்படத்தில் மிக முக்கியமான ஒன்றாகும்.
Amaran's track is now streaming on Spotify.
— Raaj Kamal Films International (@RKFI) September 30, 2024
▶️ https://t.co/I4UTqgfIUl #Amaran #AmaranDiwali #AmaranOctober31#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan #Mahendran @gvprakash @anbariv… pic.twitter.com/7iLaUYdAjo
கடுமையான உடல்ரீதியான உழைப்பை வெளிப்படுத்தி, ‘அமரன்’ படத்துக்காக உடற்கட்டை மெருகேற்றியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இயல்பாகவே ராணுவ படங்களில் தேச பற்றுடன் சேர்த்து ஒவ்வொரு ராணுவ வீரரின் தனிப்பட்ட புதைக்கப்பட்ட உணர்வுகளை கலந்துரையாடும் வழக்கத்தில், ‘அமரன்’ படமும் உருவாகியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
2024 தீபாவளிக்கு மேலும் இரண்டு படங்களுடன் போட்டியிட்டு வெளியாகவுள்ள’அமரன்’ படத்துக்கு 50 சதவீத திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ள நிலையில், இப்படத்துக்கான எதிர்பார்ப்பு கமல் ஹாசன் மற்றும் Sony தயாரிப்பு நிறுவனத்தால் மேலும் அதிகமாகி உள்ளது உண்மை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]