ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படம் ‘அமரன்’. இந்த படத்தை நடிகர் கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

உண்மை சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள இந்த படத்தின் கதை சென்னையை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உடைய வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. முதல் முறையாக ராணுவ வீரராக நடிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் டீசர் பற்றிய அறிவிப்பு இப்ப்போது வெளியாகியுள்ளது.
From the Battlefield to Big screen!
— Raaj Kamal Films International (@RKFI) September 5, 2024
Celebrate #Amaran teaser with #GOAT #AMARANxGOAT #AmaranOctober31 #TheGreatestOfAllTime #AmaranDiwali#Ulaganayagan #KamalHaasan #Sivakarthikeyan #SaiPallavi #RajkumarPeriasamy
A Film By @Rajkumar_KP@ikamalhaasan @Siva_Kartikeyan… pic.twitter.com/xiCwXAPxbV
இன்று வெளியாகி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விஜய்யின் GOAT படத்தின் இடைவேளை மற்றும் முன்னோட்டத்தில் , சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளது படக்குழு.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ படத்தில் கமல் ஹாசன் பாடியுள்ளார்!
ஏற்கனவே GOAT படத்தை காண நடிகர் சிவகார்த்திகேயன் சென்றுள்ளதும், இந்த படத்தின் மிக முக்கியமான கேமியோ பற்றிய செய்திகளும் இணையத்தில் பரவி வருவதையடுத்து, சிவகார்த்திகேயனின் ‘Amaran‘ படத்தின் டீசர் இன்று திரையரங்குகளில் திரையிடப்படுவது பெரிய செய்தியாக அமைந்துள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]