Home Cinema News வெளியானது அமீரின் அரசியல் படமான ‘உயிர் தமிழுக்கு’ ட்ரெய்லர்!

வெளியானது அமீரின் அரசியல் படமான ‘உயிர் தமிழுக்கு’ ட்ரெய்லர்!

by Sivaanantham RB

தமிழில் ‘மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்த படத்தை எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆதம் பாவா.

இதில் அமீருக்கு ஜோடியாக சாந்தினி நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, ராஜசிம்மன், சரவண சக்தி, மகாநதி ஷங்கர், சுப்பிரமணியம் சிவா, ரவி வெங்கட்ராமன், ராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், அசோக் சார்லஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இப்படத்தின் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.