2009-2018 ஆம் ஆண்டு வரை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் அசைக்க முடியாத கதாநாயகியாக வளம் வந்து கொண்டிருந்தார். 2005-ஆம் ஆண்டு நாகர்ஜுனாவுடன் சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானர் அனுஷ்கா. அதை தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு மாதவனுடன் இரண்டு படத்தில் தமிழ் மொழியில் அறிமுகமானார். ஆரம்பத்தில் ஓரளவு நடிப்பை வெளிப்படுத்தி வந்த அனுஷ்கா அருந்ததி படத்தின் மூலம் தன்னை யார் என்று சினிமா உலகிற்கு தெரியப்படுத்தினார். அந்த படத்தில் அவரது நடிப்பு வேறு யாரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு இவ்வளவு பொருத்தமாக நடித்திருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு இருந்தது அவரது நடிப்பு. பின்னர் தமிழ் தெலுங்கு என தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
விஜய், அஜித், சூர்யா, விக்ரம், ரஜினி என தமிழில் முக்கிய நடிகர்களுடன் நடித்திருந்தார். அதே போல தெலுங்கு மொழியிலும் நாகர்ஜுனா, ரவி தேஜா, கோபி சந்த், பாலா கிருஷ்ணா என முன்னணி நடிகர்களுடனும் நடித்திருந்தார். 2015-ஆம் ஆண்டு வெளிவந்த இஞ்சி இடுப்பழகி படம் அனுஷ்காவின் திரைப்பட வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. தனது உடல் எடையை அதிகரித்து இதுவரை எந்த கதாநாயகியும் செய்யாத செயலை செய்து காட்டினார். இந்த படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெற்றாலும் தனது உடல் எடையை குறைக்க பல சிரமங்களை சந்தித்தார். இதற்க்கு பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் உச்சம் தொட்டு நடித்துக்கொண்டிருந்த அனுஷ்கா அந்த படத்திற்கு பிறகு இப்படி ஒரு நடிகை இருந்தாரா என்ற அளவில் பட வாய்ப்பை இழந்தார்.
2017-ஆம் ஆண்டு வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலி-2 படத்திற்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளில் 5 படத்திற்கும் குறைவாகவே நடித்துள்ளார். உச்சத்தில் இருந்த நடிகை பட வாய்ப்பிற்கு தவித்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தன்னை மீண்டும் நிரூபிக்க உடல் எடையை குறைத்து தனக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வர தொடங்கியுள்ளார். கடந்தாண்டு மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலீஸெட்டி என்ற படத்தின் மூலம் காம்பேக் கொடுத்துள்ளார். இது ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது.
ஆரம்ப காலத்தில் தனது தந்தையின் கட்டாயத்தில் யோகா கற்று வந்த அனுஷ்கா பின்னர் அதன் மீது ஈடுபாடு கொண்டு முறையாக கற்றுக்கொண்டு யோகா ஆசிரியையாக மாறினார். கல்லூரி படிப்பை முடித்து பின்னர் தான் படித்த பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். நடிப்பில் மட்டுமல்ல சமூக சேவை செய்வதிலும் ஆர்வமாக இருந்த அனுஷ்கா டீச் எய்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்திற்கு விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் 2014- ஆம் ஆண்டு புயலின் பொது தனது சக திரைப்பட கலைஞர்களுடன் நிகழ்ச்சிகள் ஏற்ப்பாடு செய்து அதன் மூலம் வரும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
தற்போது 2, 3 படங்களில் கமிட் ஆகியுள்ள அனுஷ்கா மலையாள படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பதாக தெரியவந்துள்ளது. மலையாளத்தில் முதன் முதலில் அறிமுகமாகும் படத்திற்கு காத்தனர் என்று தலைப்பு வைத்துள்ளார் படக்குழு. தற்போது காதி என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்புவுடன் நடித்த வானம் படத்தின் இயக்குனர் க்ரிஷ் தான் இந்த படத்தையும் இயக்கவுள்ளார். மேலும் இதில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிடோரும் நடித்துள்ளனர். செய்தியாளர்களிடம் ஒரு பேட்டியில் தான் பிரென்ச் மொழி படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். இதன் மூலம் சினிமா வாழ்வில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கியுள்ளார் என சினிமா வட்டாரத்தில் பேச தொடங்கியுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]