பிரபல இசையாமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் மற்றும் இயக்குனர், நடிகர் மற்றும் நடன அமைப்பாளருமான பிரபு தேவாவும் இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் மீண்டும் இணையவுள்ளதாக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
பிரபுதேவா அவர்கள் 1989 –ம் ஆண்டு முதன் முதலாக ஹீரோவாக இந்து எனும் படத்தில் ரோஜாவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் பல வெற்றி படங்களை குவித்த இவர் மின்சாரக்கனவு படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதை பெற்றார். நடிகர் மட்டிமல்லாமல் பல திரை படங்களை முன்னணி நடிகர்களை வைத்து இயக்கி தமிழ் மற்றும் மற்ற மொழிகளிலும் வெற்றிகண்டவர்.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தமிழில் முதன் முதலாக ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் அவர் தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளில் இசையமைத்து பல விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றார். இவரைப்பற்றி தெரியாத ஆட்களே கிடையாது அந்த அளவிற்கு இவருடைய இசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டது.
இந்த இரண்டு திரையுலக பிரபலங்களும் முதன்முதலாக காதலன் எனும் திரைப்படத்தில் 1994 இம் ஆண்டு இணைந்தனர். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசை மற்றும் பிரபுதேவா வின் நடனம் இந்த இரண்டு காம்பிநேசன்களும் பூட்டும் சாவியும் போல பக்கவாக பொருந்தின. இந்த படத்தின் பாடல்களாகிய ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி, கோபாலா கோபாலா, பேட்ட ராப், முக்கால முக்காபுல போன்ற பாடல்கள் இசை மற்றும் நடனத்திலும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. இதன் வெற்றிக்கு பின்னர் இவர்கள் மீண்டும் மிஸ்டர் ரோமியோ, மின்சாரகனவு மற்றும் பல வெற்றிப்படங்களை கண்டனர்.
இவர்கள் மீண்டும் ஆறாவது முறையாக இணையும் படமான இந்த படத்தின் ப்பஸ்ட் லுக் ஐ வெளியிட்டுள்ளனர். அதில் முக்கால முக்காபுல பாடலின் இறுதியில் பிரபுதேவா கொடுக்கும் போஸையும் அதன் ஒளிவட்டமாக ஏ.ஆர்.ரகுமானின் முகத்தையும் வெளியிட்டு அதற்கு ARRPD6 என்ற பெயரையும் தற்காலிகமாக வைத்துள்ளனர். இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் இந்த பொருத்தை பார்க்க திரையுலக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: pressrelease@southmoviez.com