தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய சினிமாவிற்கே உலகம் போற்றும் “ஆஸ்கார்” விருதினை வென்று காட்டி மிகப்பெரிய பெருமையை சேர்த்தவர் இசை புயல் AR Rahman. தற்போது அவரது ரசிகர்களுக்கும் மற்றும் இந்திய திரை உலக பிரபலங்களுக்கும் அதிர்ச்சியூட்டும் வகையில் வெளியாகி உள்ளது அவரது விவாகரத்து செய்தி. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரது மனைவி சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா சமூக வலைத்தளத்தில். வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,
“திருமணம் ஆகி பல வருடங்கள் கழித்து திருமதி சாய்ரா தனது கணவர் திரு.ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் குறிப்பிடத்தக்க உணர்ச்சி அழுத்தத்திற்கு பிறகு எடுக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும், அந்த தம்பதிகள் பதட்டங்களும் சிரமங்களும் அவர்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாகியுள்ளன என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் பாலம் செய்ய முடியாது. வலி மற்றும் வேதனையுடன் தான் இந்த முடிவை எடுத்ததாக திருமதி சாய்ரா வலியுறுத்தினார். திருமதி சாய்ரா இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடமிருந்து தனக்கான privacy மற்றும் புரிதலை கோருகிறார், ஏன் என்றால் அவர் தனது வாழ்க்கையில் மிகவும் கடினமான ஒரு அத்தியாயத்தை கடக்கவுள்ளர்.”
இசை புயல் AR Rahman தனது மனைவி சாய்ரா பானுவை 29 ஆண்டுகள் கழித்து விவாகரத்து செய்து கொண்டுள்ளார்.
அவர் 1995 ஆம் ஆண்டு அவரது அம்மாவின் ஆசியுடன் சாய்ரா பானுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா, ரஹிமா என்று இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]