Home Cinema News ‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுசி’… எதிர்பார்ப்பை கூட்டிய ட்ரெய்லர்!

‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள ‘மனுசி’… எதிர்பார்ப்பை கூட்டிய ட்ரெய்லர்!

ஆண்ட்ரியாவின் புதிய படமான 'மனுசி'யின் ட்ரெய்லரை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

by Sivaanantham RB

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவரான ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘மனுசி’. இந்த படத்தை ‘அறம்’ புகழ் இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ளார். 

இதில் மிக முக்கிய ரோல்களில் நாசர், தமிழ், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், ஹக்கிம் ஷா ஆகியோர் நடித்துள்ளனர். இதற்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ளார், A.M.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆண்டனி – ஆர்.ராமர் எடிட்டிங் செய்துள்ளனர்.

இதனை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படத்தின் ட்ரெய்லரை டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது. மிக விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.