Home Cinema News விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா!

விஜய்யின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் முதல் சிங்கிள் ரிலீஸ் குறித்து பேசிய தயாரிப்பாளர் அர்ச்சனா!

by Sivaanantham RB

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யின் புதிய படமான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தை பிரபல நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இது விஜய் – வெங்கட் பிரபு காம்போவில் ரெடியாகும் முதல் படம் என்பதால், ஆடியன்ஸுக்கு இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் மிக அதிகமாக உள்ளது. தனது கேரியரில் 68-வது படமான இதில் தளபதி இரண்டு வேடங்களில் வந்து மாஸ் காட்டப்போகிறாராம்.  

இதில் விஜய்-க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், மைக் மோகன், ஜெயராம், பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் மற்றும் பலர் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை ‘AGS எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இதற்கு சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்கிறார், வெங்கட் ராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

தற்போது, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி “‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ன் முதல் சிங்கிள் டிராக் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும். மிக விரைவில் இதன் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரை வெளியிடவுள்ளோம்” என்று அறிவித்துள்ளார்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.