ஹீரோ, வில்லன் என தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரும் படங்களான கைதி, விக்ரம், மாஸ்டர், அநீதி, ரசவாதி என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அர்ஜுன் தாஸ். சமீபத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் ஒன்ஸ் மோர் படத்தின் அப்டேட் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.
அஜித் குமார் நடிப்பில் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் Good Bad Ugly படத்தின் ஷூட்டிங் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் பிரசன்னா அஜித் குமார் உடன் நடிக்கப்போவதை சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
A stunning looking #AjithKumar from the shoot of #GoodBadUgly in Madrid ❤🔥
— Suresh Chandra (@SureshChandraa) October 10, 2024
VERA LEVEL entertainment on the big screens for Pongal 2025 🔥
@MythriOfficial @Adhikravi @suneeltollywood @AbinandhanR @ThisIsDSP @editorvijay @GoodBadUglyoffl @supremesundar pic.twitter.com/7loRVoIw96
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தில், திரிஷா மற்றும் பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் ஆகியோர் நடிப்பது உறுதியானது. மேலும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.
தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அர்ஜுன் தாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை தனது x தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தொடக்க காலத்தில் நடிப்பு கனவாக கொண்டு முதன்முதலில் சென்னை வந்த சமயம் எப்படி, எங்கு தொடங்குவது என்று தெரியவில்லை. சுரேஷ் சந்திரா சார் என்னை D; One -ன் குழுவில் ஒரு அங்கமாக சேர்த்துக்கொண்டார்.
Good Bad Ugly படத்தின் கதாநாயகி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா?
பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களை சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் அஜித் சாருடன் நெருக்கமாக பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது. வீரம் படத்தின் டீசரை ஆன்லைனில் பதிவேற்றியது நான்தான்.
Exciting news! #RomeoPictures proudly acquires the Tamil Nadu, Kerala, and Karnataka theatrical rights of #GoodBadUgly
— Suresh Chandra (@SureshChandraa) October 25, 2024
#AjithKumar @MythriOfficial @Adhikravi @trishtrashers @Prasanna_actor @iam_arjundas @mynameisraahul @ThisIsDSP @suneeltollywood… pic.twitter.com/1uvyD9Rhts
மாஸ்டர் படத்திற்கு பிறகு என்னை அழைத்து “நாம் விரைவில் ஒன்றாக வேலை செய்வோம்” என்று சொன்னார். அந்த தருணம் இன்னும் நினைவில் உள்ளது. தற்போது அது சாத்தியமாகியுள்ளது. அவருடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு கனவு நனவாகும் தருணமாக நினைக்கிறன்.
இவ்வாறு Good Bad Ugly படத்தில் இணைந்தது குறித்து அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]