கைதி படத்தின் மூலம் வில்லனாக தமிழில் எண்ட்ரி தந்த Arjun Das தற்போது பெண்களின் கனவு நாயகனாகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் மூலம் ஸ்மார்ட் வில்லனாக தமிழில் அறிமுகமான Arjun Das தனது கம்பீர குரலால் இளைஞர்கள் ரசிக்கும்படியான நபராக மாறி விட்டார்.

கைதி படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் ரசிக்கும் படியான நடிப்பை வெளிப்படுத்தினார். லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் குறிப்பிடத்தகுந்த கேரக்டரில் நடித்து வருகிறார்.
வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான அநீதி படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் ரசவாதி படத்திலும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ் அடுத்து துருவ நட்சத்திரம், கும்கி 2, புரொடக்ஷன் நம்பர் 4, பாம் என வரிசையாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
விக்ரம் நடிப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். அதை தொடர்ந்து கும்கி படத்தின் 2 -வது பாகத்திலும் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிகிறது.
இதற்க்கு அடுத்தபடியாக அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி சங்கர் கூட்டணியில் “புரொடக்ஷன் நம்பர் 4” என்ற பெயர் வைத்துள்ள படத்திலும் நடிக்கவுள்ளார். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் படத்தின் பெயர் இன்னும் உறுதியாகவில்லை.
📢 @gembriopictures ProductionNo:1 🗣️
— Arjun Das (@iam_arjundas) August 30, 2024
First Look Poster From Tomorrow 12PM💣💥
Directed by @vishalvenkat_18 🤗
Produced by @SudhaSukumar4 @kaizensukumar
A @immancomposer Musical 🎶 💥@ShivathmikaR @kaaliactor @Bala_actor @editor_prasanna @dineshashok_13 @teamaimpr… pic.twitter.com/4fIg33XDbu
Arjun Das நடிக்கும் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. கிராமத்து கதைக்களத்தில் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில், D . இமான் இசையில் “பாம்” என்று படத்திற்கு பெயரிடப்பட்டு அப்டேட் வந்துள்ளது.
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் Arjun Das, காளி வெங்கட், அபிராமி, சிங்கம் புலி, நாசர், பாலா சரவணன், கிச்சா ரவி, பிரியா வெங்கட், TSK, சிவத்தமிகா போன்றோர் நடித்துள்ளனர்.
Presenting to you the Title & First Look of #BOMB 💣 💥
— Arjun Das (@iam_arjundas) August 31, 2024
Link – https://t.co/4vcq4jn4rQ
A @immancomposer Musical 🎶💥
A Magical Entertainer in Cinema's soon ♥️@vishalvenkat_18 @gembriopictures @SudhaSukumar4 @kaizensukumar @ShivathmikaR @kaaliactor @Bala_actor… pic.twitter.com/BjEJDKIg3y
பாம் படத்திற்கான மோஷன் போஸ்டர் வெளியிட்டு படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் அர்ஜுன் தாஸ் கிராமத்து கதைக்களத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை எடுற்படுத்தியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]