தனது 58வது பிறந்தநாள் மற்றும் தனது சர்வதேச மியூசிக் அகாடமி ஆன KM Music Conservatory 16 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் ஆஸ்கார் நாயகன், இசை புயல் AR ரஹ்மான் “Bharat Maestro Awards” என்ற விருதை தனது சர்வதேச மியூசிக் அகாடமி உடன் இணைந்து லான்ச் செய்தார்.
இந்த விருது, இந்தியா முழுவதும் பரவிக்கிடக்கும் இந்திய பாரம்பரிய இசை மற்றும் இசைக் கலைஞர்களை (நிபுணர்கள்/இளைஞர்கள்) கெளரவிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விருது மொத்தம் மூன்று பிரிவுகளில் கொடுக்கப்பட உள்ளது,
- சிறந்த இளம் இசைக்கலைஞர்களுக்கு 4 விருதுகள்
- சிறந்த கல்வியாளருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது”
- மாநில/அந்தந்த பகுதிகள் அளவில் பாரம்பரிய இசையை பாதுகாக்கும் இசைக்கலைஞர்கள்
என்று வகுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விருதின் mentor panel/வழிகாட்டி குழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது, அதில் ஆஷா போஸ்லே, அம்ஜத் அலி கான், பாம்பே ஜெயஸ்ரீ, அஜய் சக்ரபர்த்தி ஆகியோர் உள்ளனர். ஆலோசனை குழுவில் பலிவால், சாய் ஷ்ரவணம், கதீஜா ரஹ்மான், பாத்திமா ரஃபிக், பாரத் பாலா, ஆடம் கிரெஹ், கிளின்ட் வல்லடர்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
Bharat Maestro Awards நிறுவப்பட்டதன் நோக்கம் தற்போது வளர்ந்து வரும் மாடர்ன் இசைக்கும் இன்று வரை நிலைத்து நிற்கும் பாரம்பரிய இசைக்கும் இருக்கும் இடைவெளியை குறைத்து இந்திய இசையை சர்வதேச அளவில் மேலும் புகழ் பெறச் செய்வதே ஆகும்.