A. R. Rahman, இயக்குனர் Mani Ratnam கூட்டணி என்றாலே ஏதேனும் புதுமையான படைப்பை ரோஜா முதல் தற்போது பொன்னியின் செல்வன் வரை தந்து வருகின்றனர்.
மணிரத்தினம் படங்கள் என்றாலே ஒருவித எதிர்பார்ப்பை அனைவரின் மத்தியிலும் ஏற்படுத்தும். அதற்க்கு காரணம் அவர் சினிமா மீது கொண்டுள்ள பற்று. தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியசமான கதையை கொண்டு சினிமா உலகில் முத்திரை பதித்துள்ளார். ஒரு சிலரின் கூட்டணியில் உருவான படங்கள் காலம் கடந்தும் பேசப்பட்டு வருகிறது. அதே போல தான் மணிரத்தினம், A. R. Rahman கூட்டணியும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவிற்கு தந்த படைப்புகள்
ரோஜா

மணிரத்தினம் இயக்கிய திரைக்காவியத்தில் ஒன்றான ரோஜா படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். ராணுவ வீரர்கள் கதையை மையப்படுத்தி எடுத்த படத்தில் அரவிந்த் சாமி, மதுபாலா காதல் கதையை அழகாக காட்டியிருப்பார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த முதல் படம். ஆனால் அவருக்கு முதல் படம் போல இல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் தனது இசையால் ரசிக்க வைத்திருந்தார். “தமிழா தமிழா”, “சின்ன சின்ன ஆசை”, “காதல் ரோஜாவே” ஆகிய பாடல்களில் இசை மழையில் நனைய வைத்திருப்பார் ஏ.ஆர். ரகுமான். தேசிய திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளர் விருது, பிலிம்பேர் விருது, தமிழ்நாடு அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது என இந்த படத்திற்காக ஏ.ஆர். ரகுமானுக்கு வழங்கப்பட்டது.
பம்பாய்

தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியபடுத்திய படம் பம்பாய். வேறு வேறு சமூகத்தில் பிறந்தவர்களின் காதல் கதையை அருமையாக காட்டியிருப்பார். அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மூன்றாவது முறையாக ஜோடி சேரும் மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணி இந்த படத்தில் பாடல், பின்னணி இசை என அனைத்திலும் மிரட்டியிருந்தனர். “அந்த அரபி கடலோரம்”, “கண்ணாளனே எனது கண்ணை”, “உயிரே உயிரே”, “குச்சி குச்சி ராக்கம்மா” என ரசிக்கும்படியான பாடல்களை தந்திருந்தார்.
அலை பாயுதே

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காதல் உறவு பற்றிய கதையை இளைஞர்கள் ரசிக்கும் விதமாக எடுத்த படம் அலை பாயுதே. மாதவன், ஷாலினி இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு அதன் மூலம் தங்களின் வாழ்க்கை முறை எவ்வாறு மாறியது என்பது பற்றியும் அழகாக கூறியிருப்பார் இயக்குனர் மணிரத்தினம். ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திலும் தனது இசையால் ரசிக்கவைத்திருப்பார். மாதவன் இண்ட்ரோ பாடலான “என்றென்றும் புன்னகை”, “பச்சை நிறமே பச்சை நிறமே”, “காதல் சடுகுடு”, “ஸ்நேகிதியே”, “யாரோ யாரோடி”, “செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்” என அணைத்து பாடல்களிலும் இசையால் கலக்கியிருப்பார். தமிழில் மாதவன் நடித்த முதல் படம். ஆனால் முதல் படம் போல இல்லாமல் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
ஓ காதல் கண்மணி

மணிரத்தினம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் 2015-ல் வெளிவந்த படம் ஓ காதல் கண்மணி. மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் மற்றுமொரு வெற்றி படம். காதல் காட்சிகள், பாடல்கள் என இசையில் ரசிக்க வைத்திருப்பார் ரகுமான்.
பொன்னியின் செல்வன் 1 & 2

தமிழ் சினிமாவின் வரலாற்று சிறப்பு மிக்க படமான பொன்னியின் செல்வன் 2022-ல் மணிரத்தினம் அவர்களால் இயக்கப்பட்டது. பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிப்பில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார் மணிரத்தினம். பல ஆண்டுகளாக பல இடையூறுகளை கடந்து தமிழ் சினிமாவின் காவியமாக இன்னும் பல ஆண்டுகள் பேசப்படும். ஏ.ஆர். ரகுமான் இசையில் “பொன்னி நதி பாக்கணுமே” பாடல் குழந்தைகள் முதல் எல்லா தரப்பு மக்களையும் ரசிக்க வைத்தது.
மணிரத்தினம், ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் மற்ற சில படங்கள் வெளியாகும் போது சரியான வரவேற்பை பெறாமல் காலம் கடந்து ரசிக்கும் படியாக இருந்து வருகிறது. அந்த வகையில் திருடா திருடா, இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, இராவணன், கடல், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் ரசிக்கும் படியாக இருந்து வருகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]