Home Cinema News பாலாவின் Vanangaan படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் ஒத்திவைப்பு! 

பாலாவின் Vanangaan படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதம் ஒத்திவைப்பு! 

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கும் Vanangaan படம் ஜூலை வெளயீட்டில் இருந்து ஆகஸ்டு மாதம் வெளியாக உள்ளது. 

by Vinodhini Kumar
Vangaan movie poster

இயக்குனர் பாலா கடைசியாக 2020ல் ‘வர்மா’ படத்தை இயக்கி, அதற்கு பின் 4 வருட இடைவேளைக்கு பின் Vanangaan படத்தை முடித்துள்ளார். நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் பாலா இணைந்து தயாரிக்கிறார். பி ஸ்டுடியோஸ் மற்றும் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் உடன் தயாரிக்கிறார்கள். 

வணங்கான் படத்தை முதலில் நடிகர் சூரியாவை வைத்து எடுத்த இயக்குனர் பாலா, கதையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விலகினார். சூரியாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பதாக இருந்ததும் அத்துடன் முடிந்து விட்டது. க்ரித்தி ஷெட்டி நாயகியாக நடித்து வந்ததும் மாற்றப்பட்டு இப்போது ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். 

Vanangaan BTS picture

Vanangaan ஒத்திவைப்புக்கு காரணம்

Vanangaan படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏப்ரல் 2024ல் முடிந்து போஸ்ட் புரொடக்சன் வேலைகள் செய்யப்பட்டது. ஜூலை வெளியாகும் என எதிர்ப்ர்க்கபட்ட படம் தற்போது ஆகஸ்டு மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இரண்டு பெரிய பானர் படங்கள் ஜூலையில் வெளியாக இருப்பது தான். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ மற்றும் நடிகர் தனுஷின் ‘ராயன்’ படமும் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. 

இதனால் இப்படத்தை ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. ஆனால் 2024ன் இரண்டாம் பாதியில் வெளியாக இருக்கும் படங்கள் பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் படங்கள் தான். அதிலும் ஆகஸ்டு மாதம் ரிலீஸ் ஆக வரிசைக் கட்டி நிற்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.