Home Cinema News பக்கா ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்காக சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

பக்கா ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்காக சிவகார்த்திகேயன் பட இயக்குநருடன் கைகோர்க்கும் அருண் விஜய்!

by John Kamalesh

கோலிவுட்டில் பிரபலமான ஹீரோக்களில் ஒருவரான அருண் விஜய் கைவசம்  ‘வணங்கான், பார்டர், அக்னிச் சிறகுகள்’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘பார்டர்’ மற்றும் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து கிரீன் சிக்னல் கிடைக்காமல் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறது.

75289257

இயக்குநர் பாலா இயக்கும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அருண் விஜய் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ்  சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை ‘மான் கராத்தே‘ புகழ் இயக்குநர் திருமாறன் இயக்கப்போகிறாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படம் அருண் விஜய்யின் கேரியரில் 36-வது படமாம். இதற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கப்போகிறார்.

இதில் அருண் விஜய்-க்கு ஜோடியாக சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன் என 2 ஹீரோயின்ஸாம். மேலும், மிக முக்கிய ரோலில் ‘பிக் பாஸ்’ புகழ் பாலாஜி முருகதாஸ் நடிக்கவிருக்கிறார். ‘BTG யுனிவர்சல்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கான பூஜை இன்று போடப்பட்டது. மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படுமாம்.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.