Home Cinema News 90′ களில் பெண்களின் கனவு நாயகனாக வளம் வந்த Arvind Swamy…

90′ களில் பெண்களின் கனவு நாயகனாக வளம் வந்த Arvind Swamy…

1991 முதல் 2000 வரை தென்னிந்திய சினிமாவில் அமைதியான குணம், அழகான தோற்றம், வசீகர பேச்சை கொண்டு பெண்கள் ரசித்து கொண்டாடும் ஹீரோவாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளம் வந்தார் Arvind Swamy…

by Sudhakaran Eswaran

1991 முதல் 2000 வரை தென்னிந்திய சினிமாவில் அமைதியான குணம், அழகான தோற்றம், வசீகர பேச்சை கொண்டு பெண்கள் ரசித்து கொண்டாடும் ஹீரோவாக முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளம் வந்தார் Arvind Swamy…

அப்போது முதல் இப்போது வரை பெண்களுக்கு மாப்பிள்ளை பார்க்க சொன்னால் மாப்ள Arvind Swamy மாறி இருக்கணும் என்று தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு Arvind Swamy தமிழ் நாடு மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 21 வயதில் முதன் முதலாக ரஜினியுடன் தளபதி படத்தில் நடிக்கும் போதே இவரை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். யார் இவர் இவ்வளவு அழகாக இருக்கிறார் என்று.  

Untitled design 4 4

தொழிலதிபரான வி.டி.சுவாமி மற்றும் பரதநாட்டிய நடனக் கலைஞர் வசந்தா அவர்களுக்கு 1970-ல் பிறந்த குழந்தை தான் Arvind Swamy. பள்ளி படிப்பை சிஷ்யா பள்ளியிலும், டான் போஸ்கோ மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், பி.எஸ். சீனியர் செகண்டரி பள்ளியிலும் தனது 17-வது வயதில் முடித்தார். பின்னர் அவர் 1990-ல் சென்னை லயோலா கல்லூரியில் வணிகவியல் இளங்கலை பட்டம் பெற்றார். மேற்படிப்பிற்காக அமெரிக்காவில் வட கரோலினாவில் உள்ள வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச வணிகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 

டாக்டராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் சில மாடலிங் ப்ராஜெக்ட் செய்யும் போது மணிரத்னம் கண்ணில் பட்ட Arvind Swamy “நடிப்பதற்கு ஆசை இருக்கா?” என்று கேட்டுள்ளார். “வாய்ப்பு கிடைத்தால் நடிக்க தயார்” என்று கூறியுள்ளார் Arvind Swamy. மணிரத்தினம், சந்தோஷ் சிவன் கூட்டணியில் முதல் படமான தளபதி அறிமுகமானார் Arvind Swamy.   

“first impression is the best impression” என்பதை போல முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனத்தை தன் மேல் கொண்டு வந்தார். தளபதி படத்தை தொடர்ந்து ரோஜா, மறுபடியும், தாலாட்டு, பாச மலர்கள், பம்பாய், இந்திரா, மின்சார கனவு, புதையல் என தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு ஒரு படம் தந்தார்.  

2000 ஆண்டுக்கு பிறகு எங்கு சென்றார் என்றே தெரியாத அளவிற்கு தமிழ் சினிமா மட்டுமல்ல சினிமாவை விட்டே ஒதுங்கி இருந்தார். தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் போது இப்படி சினிமாவை விட்டு விலகியது அனைவரையும் ஆச்சரிய பட வைத்தது.  

சினிமாவிற்கு இடைவெளி விட்ட சமயம் தனது அப்பாவின்  V D Swamy and Company என்ற பெயரில் நடத்தி வந்த நிறுவனத்தை பார்த்துக்கொண்டார். பின்னர் InterPro Global- ன் தலைவர் மற்றும் ப்ரோலீஸ் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராகவும் இருந்துள்ளார். பின்னர் அவர் 2005 -ல் தனது சொந்த நிறுவனமான Talent Maximus -ஐ நிறுவினார். சினிமாவில் மட்டுமல்ல தொழில் வாழ்க்கையிலும் தன்னை நிரூபித்து காட்டினார் Arvind Swamy. 

சினிமா, தொழில் என வெற்றியை சுவைத்து வந்த Arvind Swamy-க்கு 2005- ஒரு கசப்பான நிகழ்வு நடந்தது. அதுதான் விபத்தில் அவரது கால் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் வலியால் அவதிப்பட்டார். அதிலிருந்து குணமாகி வெளிவர 4-5 வருடங்கள் ஆனது. 

விபத்தில் ஏற்பட்ட பாதிப்பு சரியாகும் போது உடல் பருமனானது. மேலும் மணிரத்னம் உடன் நல்ல உறவில் இருந்த arvindsamy இந்த கசப்பான அனுபவத்தில் இருந்து வெளிவர உனக்கு ஒரு வாய்ப்பு தருவதாக கூறி பருமனான உடலை குறைத்து கடல் படத்தில் மீண்டும் காம்பேக் தர வைத்தார்.

Untitled design 5 4

என்னதான் தொழில் துறையில் சாதித்து வந்தாலும் சினிமாவில் தந்த வெற்றிகள் மீண்டும் Arvind Swamy-யை நடிக்க வரவைத்தது. மணிரத்னம் இயக்கத்தில் 2013-ல்  “கடல்” படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். சாம் பெர்னாண்டோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அதுவரை Arvind Swamy-யை ரொமான்டிக் ஹீரோவாக பார்த்துவந்த சினிமா உலகிற்கு பெரும் அதிர்ச்சியை தந்த படம் “தனி ஒருவன்”. மோகன் ராஜாவின் வித்தியாசமான யோசனையில்  “சித்தார்த் அபிமன்யு” என்ற கேரக்டரில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் Arvind Swamy. 

படத்தில் ஹீரோ என ஜெயம் ரவிக்கு பதில் இவரை கொண்டாடும் அளவிற்கு இவரது நடிப்பும், கேரக்டரும் இருந்தது. இப்படிபட்ட கேரக்டர் இந்திய சினிமாவில் கண்டதில்லை என மிக பெரிய ஹைப் Arvind Swamy மேல் வந்தது.  

அதன் பின்னர் போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம், தலைவி போன்ற படங்களில் நடித்து வந்தார்.  

Arvind Swamy Movie list:

1991தளபதி 
1992ரோஜா 
1993மறுபடியும், தாலாட்டு.
1994பாச மலர்கள், டூயட் 
1995பம்பாய், இந்திரா
1997மின்சார கனவு, புதையல்.
1999என் சுவாச காற்றே 
2013கடல் 
2015தனி ஒருவன் 
2017போகன் 
2018செக்க சிவந்த வானம், பாஸ்கர் ஒரு ராஸ்கல் 
2021தலைவி 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.