காமெடி நடிகர் சந்தானம் நடிப்பில் விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் புதிய படம் ‘இங்க நான் தான் கிங்கு’. இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கிக் கொண்டிருக்கும் இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக ப்ரியாலயா டூயட் பாடி ஆடியுள்ளார்.
இதில் விவேக் பிரசன்னா, தம்பி இராமையா, கூல் சுரேஷ், பால சரவணன், முனிஷ்காந்த், சுவாமிநாதன், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
Delighted to unveil the second single #KulukkuKulukku from #IngaNaanThaanKingu for my dear Nanban @iamsanthanam. Enjoy the beats and vibes! 🎶
— Arya (@arya_offl) April 10, 2024
All the best team 👍🔥https://t.co/vXgsyHGwhl
An @immancomposer Musical🎶
✍️@VigneshShivN#GNAnbuchezhian @Sushmitaanbu @iamsanthanam… pic.twitter.com/NVF6v2jr39
டி.இமான் இசையமைத்துக் கொண்டிருக்கும் இதற்கு ஓம் நாராயண் ஒளிப்பதிவு செய்துள்ளார், எம்.தியாகராஜன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தை GN.அன்புசெழியனின் ‘கோபுரம் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில், இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக்கை ரிலீஸ் செய்தனர். தற்போது, பிரபல நடிகர் ஆர்யா தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ‘குலுக்கு குலுக்கு’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ் குவித்து வருகிறது. படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]