தமிழ் திரையுலகில் பாணா காத்தாடி, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் முன்னணி நடிகராக நடித்த அதர்வா முரளி பட்டது அரசன், குருதி ஆட்டம் படங்களுக்கு பிறகு திரையுலகிற்கு வராமல் இருந்தார். அதன் பிறகு, தற்போது Dawn Pictures தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் வரவிருக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் பெயர் இதயம் முரளி என்று படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
இதயம் முரளி படத்தின் அதிகாரபூர்வமான முதல் பார்வையை வெளியிட்டது படக்குழு. இப்படம் காதல் சார்ந்த ஒரு பக்க காதலை மையப்படுத்திக்காட்டும் ஒரு படமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Presenting you the Second Look of #IdhayamMurali 💖
— DawnPictures (@DawnPicturesOff) February 13, 2025
Title Teaser out now on @thinkmusicindia
🔗:- https://t.co/qzNnQ5vNx0@Atharvaamurali @MusicThaman @AakashBaskaran @natty_nataraj @PreityMukundan @Kayadulohar @Dop_Sai @RakshanVJ @JustNiharikaNm @Actor__SUDHAKAR @AngelinB3… pic.twitter.com/y3cskkE9kV
அனைவருக்கும் தெரிந்த முன்னணி சிறந்த நடிகர் முரளி. இவரின் படத்தையும் நடிப்பையும் வைத்து இவரை இதயம் முரளி என்று அழைப்பர். இவரின் மகனான அதர்வா முரளி இவரது பெயரை வைத்த படத்தில் நடிப்பது மேலும் ஆவலையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்துகிறது. ஆக்ஷன், கிரைம், காதல் ஆகிய அனைத்து கதாபாத்திரங்களையும் பிரமாதமாக நடிக்கும் அதர்வா முரளி இந்த ஒருபக்க காதலை மையமாக வைத்த கதாபாத்திரத்திலும் அருமையாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘இதயம் முரளி’ காதல் கலந்த நினைவில் வாழும் ஒருவரின் கதையை வெளிப்படுத்துவதாக உள்ளது.தன் முன்னாள் காதலின் நினைவில் வாழும் காவிய காதலனாகவும், அந்த நினைவுகளில் இருந்து மீள முயன்று வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் இதயம் முரளியாகவும் அதர்வா முரளி கதாபாத்திரம் அமையும் என எண்ணப்படுகிறது. மேலும், இப்படத்தில் பல நடிகை நடிகர்கள் நடித்துள்ளது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தமன் எஸ் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள் | அதர்வா, ப்ரீதி முகுந்தன், கயாது, நட்டி, நிகாரிகா என்எம், ரக்ஷன், திராவிட், ஆண்ட்லின், பிரக்யா, சுதாகர், யசஷ்ரீ |
இயக்குனர் | ஆகாஷ் பாஸ்கரன் |
இசை | தமன் எஸ் |
ஒளிப்பதிவாளர் | சி.எச். சாய் |
தொகுப்பாளர் | பிரதீப் ஈ ராகவ் |
தயாரிப்பு வடிவமைப்பாளர் | எம்.ஆர். கார்த்திக் ராஜ்குமார் |
துணை இயக்குனர் | செந்தில்குமார் கேசவன் |
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]