Home Cinema News ‘நேசிப்பாயா’… விஷ்ணு வரதனின் அடுத்த பட டைட்டில்!

‘நேசிப்பாயா’… விஷ்ணு வரதனின் அடுத்த பட டைட்டில்!

‘நேசிப்பாயா’படத்தில் அதிதி ஷங்கர் மற்றும் ஆகாஷ் முரளி நடிக்கிறார்கள்!

by Sruthi Balasubramanian

மறைந்த முன்னணி நடிகர் முரளியின் இரண்டாவது மகனான ஆகாஷ் முரளி. இவர் ‘மாஸ்டர்’ படத்தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் மகள் ஸ்னேகா பிரிட்டோவை  மணந்தார். ஆகாஷ் முரளிக்கும் அண்ணன் அதர்வா போலவே சினிமாவுக்குள் நுழையவேண்டும் என்கிற ஆசைவர, அதைத் தன் மனைவி ஸ்னேகாவிடம் சொல்ல மாமனாரே தயாரிப்பாளாராக களத்தில் இறங்கிவிட்டார்.

படத்தை XB ஃபில்ம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க, ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பில்லா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு காதல் படமாக அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அர்ஜுன் மற்றும் தியா என்ற கதாப்பாத்திரத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதித்தி சங்கர் நடிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் உடைய அனைத்து படங்களுக்கும் இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘நேசிப்பாயா’ படம் 2025ல் வெளியாகும் என தெரிகிறது. 

‘நேசிப்பாயா’ poster

இந்த படத்தில் ஹிந்தி மற்றும் தமிழ் நடிகை கல்கி கண்மணி, பிரபு, சரத்குமார், குஷ்பு என் பலர் நடிக்க உள்ளனர். படத்தை போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் இந்தியாவில் படம்பிடிக்க உள்ளனர். ஷூட்டிங் 100 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகியிருக்கிறது. தற்போது போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் ‘நேசிப்பாயா’ எனப்படத்துக்கு டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.