Home Cinema News ஹிந்தியில் அட்லி தயாரிக்கும் ‘பேபி ஜான்’ படத்தில் சிறப்பு தோற்றம் இவரா?!

ஹிந்தியில் அட்லி தயாரிக்கும் ‘பேபி ஜான்’ படத்தில் சிறப்பு தோற்றம் இவரா?!

இயக்குனர் அட்லி ஹிந்தியில் தயாரிக்கும் ‘பேபி ஜான்' படத்தில் நடிகர் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். 

by Vinodhini Kumar

இயக்குனர் அட்லி ஜவான் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹிந்தியில் தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். நடிகர் வருண் தவன் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘பேபி ஜான்’. தமிழில் நடிகர் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் நடித்த ‘தெறி’ படத்தின் ஹிந்தி ரீமேக்கான இந்த படத்தை அட்லி இணைந்து தயாரித்துள்ளார்‌. 

பேபி ஜான் poster

இதில் சமீபத்தில் கிடைத்துள்ள தகவல் நடிகர் சல்மான் கான் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பதுதான். இந்த செய்தி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சல்மான் கானின் ரசிகர்கள் ஏற்கனவே போஸ்டர்களை உருவாக்கி இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். 

Salman Khan

ஆரம்பத்தில் VD 18 என தலைப்பிட்டிருந்த படத்துக்கு தமன் அவர்கள் இசையமைக்கிறார். அட்லி இணைந்து தயாரிக்கும் ‘பேபி ஜான்’ படத்தை கலீஸ் இயக்குகிறார். மே மாதம் வெளியாக இருந்த இப்படம் தற்போது டிசம்பர் 25 வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக அட்லி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார் என்பதால், ‘பேபி ஜான்’ படத்தில் இவர்கள் சிறப்பு தோற்றத்தில் இடம்பெறுவது நல்ல ட்ரீட் டாக் அமைகிறது. இப்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கும் ‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான் கான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு வெளியாகிறது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.