Home Cinema News சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் படங்கள்…

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் படங்கள்…

பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை என விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு படங்கள் வெளியாகி வரும். அந்த வகையில் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் சில முக்கிய படங்கள். 

by Sudhakaran Eswaran

பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை என விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு படங்கள் வெளியாகி வரும். அந்த வகையில் ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் சில முக்கிய படங்கள். 

முன்னணி ஹீரோ, ஹீரோயின் படங்கள் பெரும்பாலும் ஒரே சமயம் வெளியாவதில்லை. அப்படி வெளியாகும் போது தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அவற்றை சமாளித்து வெளிவரும் படங்கள் ஏதேனும் ஒன்று சரியாக ஓடவில்லை என்றால் ஹீரோ, ஹீரோயின்களின் மதிப்பு குறைந்து விடுகிறது. 

இந்த மாறி பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பெரும்பாலும் ஒரே சமயம் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் செய்வதை தவிர்த்து வருகின்றனர். 

அந்த வகையில் விக்ரமின் தங்கலான், கீர்த்தி சுரேஷுன் ராகு தாத்தா, அருள் நிதியின் டிமாண்டி காலணி 2 என இந்த வருட ஆகஸ்ட் 15-ல் வெளியாகும் படங்கள்.  

தங்கலான்:

image 30

கார்த்தி, ரஜினி ஆகியோரை வைத்து வெற்றி படங்களை தந்த பா. ரஞ்சித், விக்ரமை வைத்து தங்கலான் என்ற சரித்திர படைப்பை எடுத்துள்ளார். விக்ரம் என்றாலே தனது கேரக்டருக்காக கடினமாக உழைக்கும் ஒரு மகா நடிகன். அப்படிபட்ட ஒரு நடிகனை வைத்து பிதாமகன், ஐ போன்ற காலத்திற்கும் அழியாத படங்களை தந்துள்ளனர். 

விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, சம்பத் ராம் போன்றோர் நடித்திருந்தனர். GV. பிரகாஷ் குமார் இசையில் பா. ரஞ்சித் இயக்கத்தில், ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவரவிருக்கிறது. இதற்கான ட்ரைலர், பாடல் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது. 

ராகு தாத்தா:

image 31

ஹீரோவை மையப்படுத்தி வெளியாகும் படங்களுக்கு மத்தியில் சில ஆண்டுகளாக ஹீரோயினை முக்கிய கேரக்டராக வைத்து எடுத்து வரும் படங்கள் பெரும் வரவேற்பை பெறுகிறது. அந்த வகையில் முன்னணி நடிகைகள் தங்களின் கேரக்டருக்கு செட்டாகும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ், MS. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், அனந்தசாமி ஆகியோரை வைத்து சுமன் குமார் இயக்கத்தில், சென் ரோல்டன் இசையில் வெளியாகும் படம் ரகு தாத்தா. கீர்த்தி சுரேஷ்- ன் வித்தியாசமான கேரக்டரில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளியாகிறது. 

டிமாண்டி காலணி 2:

image 32

2015-ல் வெளியான த்ரில்லர் படமான டிமாண்டி காலணி ரசிக்கும் படியாக இருந்த நிலையில் அதற்கான இரண்டாவது பாகம் தற்போது R. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பில், சாம் .CS இசையில், BTG யூனிவேர்சல் தயாரிப்பில் வெளியாகும் படம் டிமாண்டி காலணி 2. 

முதற்பாகத்தை போல இரண்டாம் பாகமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஆகஸ்ட் 15-ல் வெளியாகவுள்ளது. 

ஆகஸ்ட் 15, 2024-ல் வெளியாகவிருக்கும் படங்கள் லிஸ்ட். 

படங்கள்    வெளியாகும் தேதி நடிகர்கள்     இயக்குனர்கள்   
தங்கலான் 15, ஆகஸ்ட் 2024 விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, சம்பத் ராம்பா. ரஞ்சித்      
ரகு தாத்தா  15, ஆகஸ்ட் 2024 கீர்த்தி சுரேஷ், MS. பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், அனந்தசாமி சுமன் குமார் 
டிமாண்டி காலணி 2 15, ஆகஸ்ட் 2024 அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், ரெடின் கிங்ஸ்லிR. அஜய் ஞானமுத்து

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.