Home Cinema News 2024 ஆகஸ்ட்டில் வெளிவர வரிசைகட்டி நிற்கும் படங்கள்!

2024 ஆகஸ்ட்டில் வெளிவர வரிசைகட்டி நிற்கும் படங்கள்!

2024ன் முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் தமிழில் உள்ள பெரிய பட்ஜெட் படங்கள் பல வெளியாக காத்திருக்கும் படங்களில் பாதி படங்கள் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகிறது. 

by Vinodhini Kumar

இந்தாண்டின் முதல் பாதியில் பிற மொழி படங்கள் தமிழ்நாட்டில் பல கோடி வசூல் செய்து, ஏன் தமிழ் படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகவில்லை? என்று பெரிய கேள்வி எழுந்தது. ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் இந்த கேள்விக்கு பதிலில்லாமல் தவித்து வந்தபோது ‘மகாராஜா‘ படம் வெளியாகி, தக்க பதிலளித்தது. 

2024ன் இரண்டாம் பாதியில் தமிழில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாக வரிசைகட்டி நிற்கிறது. அதிலும் முக்கியமாக கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், சூரியா, விக்ரம், தனுஷ் என முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக வெளியாகிறது. ஆகஸ்ட் மாதம் மட்டும் 14 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. 

தற்போது இருக்கும் தகவல் படி,

ரிலீஸ் தேதிஇயக்குனர்நடிகர்கள்படம்
02/08/2024சிம்பு தேவன்யோகி பாபு, கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த்போட்
02/08/2024ஆனந்த் ராம்அனந்த் ராம், பவானி ஸ்ரீ, ஆர்.ஜே.விஜய், மோனிகாநண்பன் ஒருவன் வந்தபிறகு
02/08/2024விஜய் மில்டன்விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஆர்.சரத்குமார், மேகா ஆகாஷ்மழை பிடிக்காத மனிதன்
02/08/2024பாரி இளவழகன் பாரி இளவழகன், சேத்தன், அம்மு அபிராமி, K.V.N மணிமேகலைஜமா
02/08/2024B ராமசந்திரன்காயத்ரி, பால சரவணன், தேவ் ராம்நாத், ஜன நாதன் பேச்சி
02/08/2024RG கிருஷ்ணன்நக்குல், அர்த்தனா பினு, கே.எஸ்.ரவிக்குமார், முனிஷ்காந்த்வாஸ்கோ டா காமா
09/08/2024ஹலிதா ஷமீம்எஸ்தர் அனில், பிரவீன் கிஷோர், சி.கௌரவ் காளைமின்மினி
14/08/2024சத்தியசிவாசசிகுமார், லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், மாளவிகா அவினாஷ்ஃப்ரீடம்
15/08/2024பா.ரஞ்சித்விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி திருவோடுதங்களான்
15/08/2024சுமன் குமார்கீர்த்தி சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய்ரகு தாத்தா
15/08/2024ஆர். அஜய் ஞானமுத்துஅருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஆண்டி ஜாஸ்கெலைனன், செரிங் டோர்ஜிடிமான்டி காலனி 2
15/08/2024தியாகராஜன்பிரசாந்த், கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த்அந்தகன்
23/08/2024பி.எஸ்.வினோத்ராஜ்சூரி, அன்னா பென், ஜவஹர் சக்திகொட்டுக்காளி
23/08/2024மாரி செல்வராஜ்பொன்வேல். எம், ராகுல். ஆர், கலையரசன், நிகிலா விமல்வாழை

ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி 6 தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு, கௌரி கிஷன் நடிக்கும் ‘போட்’, நடிகர் ஆனந்த் ராம் இயக்கி நடித்துள்ள ‘நண்பன் ஒருவன் வந்தபிறகு’, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’, பாரி இளவழகன் இயங்கி நடித்துள்ள ‘ஜமா’, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் நடிகை காயத்ரி நடித்துள்ள ‘பேச்சி’  மற்றும் நக்குல் நடித்துள்ள ‘வாஸ்கோ டா காமா’ ஆகிய படங்கள் வெளியாகிறது. 

அதேபோல் 9ம் தேதி ஹலிதா ஷமீம் இயக்கம் ‘மின்மினி’ படம் ரிலீசாகிறது. ஆகஸ்ட் 15 அன்று விக்ரம் நடிக்கும் ‘தங்களான்’, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’, அருள்நிதி நடிக்கும் ‘டிமான்டி காலனி 2’ மற்றும் பிரஷாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படங்கள் வரிசையாக வெளியாகிறது. 

ஆகஸ்ட் 23 அன்று PS வினோத்ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய ‘வாழை’ படங்கள் வெளியாகிறது. இப்படி வருகிற ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் மக்களுக்கு எந்த படத்தை பார்ப்பது என்ற குழப்பம் ஏற்படும் அளவிற்கு வரிசையாக ரிலீஸ் ஆகிறது இந்த படங்கள். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.