Home Cinema News சஸ்பென்ஸ் Thriller படங்களுக்கு முன்னோடி… Balu Mahendra’வின் மாறுபட்ட படைப்பு…

சஸ்பென்ஸ் Thriller படங்களுக்கு முன்னோடி… Balu Mahendra’வின் மாறுபட்ட படைப்பு…

அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் psycho த்ரில்லர் படங்கள் வெளிவராத நிலையில் பாலுமகேந்திரா அவர்களின் புது முயற்சியாக மூடு பனி என்ற psycho த்ரில்லர் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். 

by Sudhakaran Eswaran

அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் psycho thriller படங்கள் வெளிவராத நிலையில் Balu Mahendra அவர்களின் புது முயற்சியாக மூடு பனி என்ற psycho த்ரில்லர் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். 

1920x1080 9891596c 68f5 45f6 81fc b82a70b718ec

பாலு மகேந்திரா அவர்களின் மாறுபட்ட கதை அம்சம் கொண்டு 1980-ல் வெளிவந்த படம் மூடு பனி. இதில் பிரதாப், ஷோபா, என்.விஸ்வநாதன், காந்திமதி, கோகிலா மோகன், சாந்தி வில்லியம்ஸ், கே.எஸ். ஜெயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை ராஜா சினி ஆர்ட்ஸ் தயாரிக்க, இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்தார். பாலு மகேந்திரா மற்றும் இளையராஜா என்ற இரண்டு லெஜெண்ட்கள் இணைந்து முதன் முதலில் பணியாற்றிய படம் மூடு பனி. இளையராஜா அவர்களுக்கு இது 100 வது படமாகும். கங்கை அமரன் வரிகளில் இளையராஜா இசையில் “என் இனிய பொன் நிலாவே” என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. சஸ்பென்ஸ் திரில்லர் நிறைந்த இந்த படம் தியேட்டரில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.  

தனது சிறு வயதில் நிகழ்ந்த ஒரு சில நிகழ்வுகளால் பிரதாப் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தார். தனது சிறுவயதில் தந்தை பெண்களுடன் தவறான உறவு வைத்திருப்பார். இதனால் தனது தாயை கொடுமைப்படுத்தி வருவார். இது நாளுக்கு நாள் தீவிரமைடைந்து தனது தாய் இறந்து விடுவார். தாய் இறப்பிற்கு காரணம் தந்தை தவறான உறவு வைத்திருந்த பெண்கள் தான் என பிரதாப் ஆழ் மனதில் பதிந்து விடும், இது நாளைடைவில் மன நோயாக மாறி விடும். 

பெங்களுருவில் பணிபுரிந்து வரும் பிரதாப் ஒரு முறை தனது பக்கத்து வீட்டு மாமாவை ( போலீஸ் ஆஃபீஸ்ர் ரகுநாத் ) பார்க்கிறார். மகிழ்ச்சியடைந்த பிரதாப் சிறு வயது நிகழ்வை நினைத்து பார்க்கிறார். தனது அம்மாவின் நிலையை கேட்டதும் எதுவும் பேசாமல் சோகமடைகிறார். டாக்டரிடம் தனது மனநிலை குறித்து ஆலோசனை செய்கிறார்  பிரதாப். இதற்க்கு ஒரே தீர்வு நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர் அறிவுரை கூறுகிறார். 

பின்னர் கதாநாயகி (ஷோபா ) மீது காதல் ஏற்பட்டது. அவ்வப்போது நாயகியை பார்ப்பது, பேசுவது என பிரதாப் செய்து கொண்டிருந்தார். இதற்கிடையில் பெண்கள் மர்மமான முறையில் அந்த பகுதியில் இறந்து வந்தனர். போலீஸ் ஆஃபீஸ்ர் ரகுநாத் கொலை குறித்து ஆய்வு செய்யும் போது பிரதாப் கொலை செய்து வருவது தெரியவந்தது. பிரதாப் ஷோபாவை கடத்தி கொண்டு தனது ஊட்டி வீட்டில் தன்னோடு ஒரு மாதம் இருக்குமாறு வற்புறுத்துவார். ஆனால் நாயகி ஷோபா மறுத்து விடுவார். பின்னர் ஒரு வாரம் மட்டும் தங்குவதற்கு சம்மதம் தெரிவிப்பர்.     

ஒரு முறை நாயகி  தப்பிக்க முயன்றபோது பிரதாப்பை தாக்கிவிட்டு தப்பித்து விடுவார். பிரதாப் நாயகியை பிடித்து தனது வீட்டில் அடைத்து விட்டு மருத்துவனை சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வார். வீடு திருப்பும் பிரதாப்பை கண்டவுடன் நாயகி மீண்டும் தப்பிக்க முயற்சிக்கிறார். அங்கு ஒரு வீட்டில் உள்ளே சென்ற நாயகி படுத்திருக்கும் ஒருவரிடம் உதவி கேட்க முயன்ற போது பயந்து விடுகிறார். 

பின்னர் அங்கு வந்த பிரதாப் எலும்புக்கூடு தனது அம்மா தான் என்பதை தெரியப்படுத்துகிறார். தனது அம்மா இறந்த பின்பு யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்திருக்கிறார். அம்மாவின் இந்த நிலைக்கு தந்தையிடம் உறவு வைத்திருந்த தவறான பெண்கள் தான் காரணம் என எண்ணி அவர்களை தொடர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதை கண்ட நாயகி மற்றும் போலீஸ் ஆஃபீஸ்ர் ரகுநாத் இருவரும் பிரதாப்பின் இந்த நிலையை கண்டு மன வேதனை அடைகின்றனர். இறுதியில் எந்தவொரு முடிவும் இல்லாமல் கதையை முடித்திருப்பார் இயக்குனர். 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.