தமிழில் ‘ஐரா‘, ‘எச்சரிக்கை- இது மனிதர்கள் நடமாடும் இடம்’ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சார்ஜுன் K M. இவரின் அடுத்த படத்தின் கதையை எழுதியுள்ளார் பிரபல திரைப்பட விமர்சகர் பரத்வாஜ் ரங்கன். எத்தனையோ படங்களை விமர்சித்த அவர் தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவில் கதை ஆசிரியராக களம் இறங்குகிறார்.
We are happy to announce our next exciting film written by @baradwajrangan and directed by #SarjunKM. Cast and crew details soon.@lakku76 @venkatavmedia pic.twitter.com/4sso4mQvOq
— Prince Pictures (@Prince_Pictures) July 15, 2024
இந்த படத்தை ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிவர, படத்தின் கதை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வளர்ந்து வருகிறது. மற்ற இயக்குனர்களின் படங்களுக்கு தன் விமர்சனங்கள் வழியாக அறிவுரை சொல்லும் பரத்வாஜ் ரங்கன், இந்த படத்தில் என்ன எழுதியிருப்பார் என்று பலரும் அவர்களின் எண்ணங்களை அந்த அறிவிப்பு பதிவில் comment செய்து வருகிறார்கள்.
இதற்கு முன் ‘சீதக்காதி‘, ‘Modern Love Chennai’, ‘வெப்பன்‘ ஆகிய படங்களில் கேமியோ வேடங்களில் நடித்துள்ளார் பரத்வாஜ் ரங்கன். அவரின் நுணுக்கமான விமர்சங்களும், சினிமா பற்றிய புரிதலும் அவருக்கான அடையாளமாக இருக்கிறது. இதையெல்லாம் அவர் கதையில் பயன்படுத்துவரா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]