பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4ல் கலந்துக்கொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தவர் பாலாஜி முருகதாஸ். இவரின் துடுக்கான உடலமைப்பும் உயரமும் கண்டிப்பாக சினிமாவில் இவருக்கு உதவும் என பலரும் கூறிய நிலையில், பல படங்களில் அவர் நடிப்பதாக செய்திகள் வந்தது.

பிக் பாஸ் சீசன் 4 முடிந்ததும், பிக் பாஸ் அல்டிமேட் என்ற OTT ஸ்பெஷல் நிகழ்ச்சியிலும் பங்கேற்ற பாலாஜி முருகதாஸ், அது முடிந்ததும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.
‘ஃபையர்’ (Fire) என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வந்த பாலாஜி முருகதாஸ், அதன் தயாரிப்பாளர் மீது ஒரு பெரிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். JSK ஃபில்ம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள படத்துக்கு நடிகர் பாலாஜி முருகதாஸ் பேசிய சம்பளத்தை தராமல் ஏமாற்றியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த பிரச்சனையால் இனிமேல் சினிமாவில் நடிக்கபொவதில்லை என தெறிவித்துள்ளார்.
I acted in a movie called fire @JSKfilmcorp this guy never paid me single penny !
— Balaji Murugadoss (@OfficialBalaji) July 10, 2024
All I wanted to say is , dude fuck off
இதை பற்றி தன்னுடைய X தளத்தில் பதிவிட்ட பாலாஜி, இந்த படத்துக்கான சம்பளத்தில் ஒரு ரூபாய் கூட எனக்கு தரவில்லை’ என கூறியுள்ளார் என கடுமையாக பதிவிட்டுள்ளார். தயாரிப்பாளர் சதீஷ் குமார் இதற்கு எந்த பதிலும் கூறவில்லை. இந்த படத்தில் அவருடன் பிக் பாஸ் வீட்டில் பயணித்த சாக்ஷி அகர்வால் மற்றும் ரட்சிதா மகாலட்சுமி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]