Home Cinema News பிக்பாஸ் Pradeep Anthony’க்கு நிச்சயம் முடிஞ்சாச்சு!!

பிக்பாஸ் Pradeep Anthony’க்கு நிச்சயம் முடிஞ்சாச்சு!!

Pradeep Anthony தனது சமூக வலைதள பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு தனக்கும் தனது காதலிக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

by Santhiya Lakshmi

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பாதியில் வெளியேற்றப்பட்டவர் Pradeep Anthony. 

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி இவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பினாலும் இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். 

Snapinsta.app 448678218 1155436032440983 7856691006109237940 n 1024 1

இந்த நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் நிச்சயதார்த்த போட்டோக்களை வெளியிட்டு தனக்கும் தனது காதலிக்கும் நிச்சயம் முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

மேலும் அந்தப் பதிவில் ‘’எனக்கு இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. என்னை நம்பி பொண்ணு கொடுத்துட்டாங்க’’ என்று பதிவு செய்துள்ளார். பதிவை பார்த்த ரசிகர்கள் பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்த வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பிரதீப் திருமண செய்ய இருக்கும் பெண் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.