Home Cinema News Black படத்தின் மூலம் காம்பேக் தரும் Jiiva. 

Black படத்தின் மூலம் காம்பேக் தரும் Jiiva. 

ரசிக்கும் படியான படங்களை தந்து வந்த jiiva 2022 -க்கு பிறகு பெரிய அளவில் தமிழில் நடிக்கவில்லை. தற்போது Black படத்தின் மூலம் காம்பேக் தந்துள்ளார். படத்தின் ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

by Sudhakaran Eswaran

பிரபல தயாரிப்பாளரான R.B. சௌத்ரியின் மகனாக ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ஜீவா தொடர்ந்து தித்திக்குதே, டிஸ்யூம், ராம் என ரசிக்கும்படியான படங்களில் நடித்து வந்தார். பின்னாளில் கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, சிங்கம் புலி, நண்பன், நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார். 

பின்னர் வந்த படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற தவறிய நிலையில் நீண்ட நாட்களாக ஜீவா வெற்றிப்படத்தை தர முயற்சித்து வந்தார். 2022 -ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல், வரலாறு முக்கியம் படங்களுக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ள Black படத்தில் நடித்துள்ளார்.

 

த்ரில்லர் படமான பிளாக் படத்தை KG. பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். மேலும் படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, யோக் ஜாபீ ஆகியோரும் நடித்துள்ளார். மாநகரம், மான்ஸ்டர், டானாக்காரன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். 

சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படமானது இரவில் நடக்கும் நிகழ்வுகளை கொண்டு படமாக்கப்பட்டது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளது. பிளாக் படமானது வரும் ஆயுத பூஜை சமயம் அக்டோபர் 11-ல் வெளியாகும். 

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனராக சினிமாவில் தன்னை நிரூபித்த Vijay Antony

சமீபத்தில் நடிகர் ஜீவா கள்ளக்குறிச்சி அருகே உள்ள சின்னச்சேலம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். ஜீவா உள்ளிட்ட மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

ட்ரைலரில் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் வெளியில் சென்று தங்கிய இடத்தில் நடைபெறும் சுவாரஸ்யமான, த்ரில்லர் நிகழ்வுகள் கொண்டு வெளியானது. 

You may also like

Leave a Comment

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.