‘ஸ்டார்’ படத்துக்கு பின் நடிகர் கவின் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இளம் நடிகராக வளர்ச்சி பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளார். தன்னைப்போல இளம் இயக்குனர்களுடன் இணைந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார்.
Lighting up your Diwali with a dose of fun and entertainment 🔥#BloodyBeggarFromDiwali 💥#BloodyBeggar @Nelsondilpkumar @Kavin_m_0431 @afilmbysb @KingsleyReddin @sujithsarang @JenMartinmusic @Nirmalcuts @ManimozhianRam2 @sv_sandhosh @jShakthiPradeep @valentino_suren pic.twitter.com/qyIUz75oTD
— Filament Pictures (@FilamentPicture) September 2, 2024
இந்த வரிசையில் அடுத்ததாக புது இயக்குனர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் ‘Bloody Beggar’ படத்தில் நடித்துவருகிறார். பெண்களுக்கு பிடித்தமான கதாபாத்திரங்களில் இதுவரை நடித்துவந்த நடிகர் கவின், இந்த படத்துக்காக தன்னுடைய தோற்றத்தை முழுமையாக மாற்றி அடையாளமே தெரியாமல் காணப்படுகிறார்.

‘Bloody Beggar’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முதல் தயாரிப்பு படமாகவும் அமைகிறது. இந்த படத்தில் நடிகர் கவின் மற்றும் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி நடிப்பது உறுதியாகியுள்ளது. வேறு நடிகர் நடிகைகளை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
Bloody Beggar…Nelson தயாரிப்பில் Kavin நடிக்கும் படத்தின் ஸ்பெஷல் என்ன?
நடிகர் கவினுக்கு இதுவே முதல் தீபாவளி வெளியீடு ஆகும். பொதுவாக தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் மீதான எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகம். அதிலும் பெரிய ஹீரோக்களின் படங்களுடன் போட்டிபோடும் வாய்ப்பும் அமையலாம். இந்த காரணிகள் இருந்தும் ‘ப்ளடி பெக்கர்’ படம் தீபாவளிக்கு வெளியாவது ஆச்சரியமான செய்தியாக பார்க்கப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]