Home Cinema News யோகி பாபு நடிப்பில் ‘Boat’ பட விமர்சனம்

யோகி பாபு நடிப்பில் ‘Boat’ பட விமர்சனம்

சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் நடித்துள்ள 'Boat' ஒரு நகைச்சுவையான வரலாற்று survival படம். 

by Vinodhini Kumar

இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன், சாம்ஸ், மதுமிதா, நடிகர் ஷா ரா நடித்துள்ள ஒரு வரலாற்று survival படம் தான் ஆகஸ்ட் 2 வெளியாகியுள்ள ‘Boat‘. படத்தின் தொடக்கத்துலயே பார்வையாளர்களுக்கு இது நிஜத்தில் நடந்த சம்பவத்தின் கற்பனை கலந்த கதை என்று சொல்லி ஆரம்பித்துளர்கள். 

Boat movie cast

படத்தின் கதைக்களம் 

முதல் 10 நிமிடம் கதையில் வரும் கதாபாத்திரங்கள் பற்றியம் அவர்களின் குணாதிசியங்களை காமித்து கதை ஆரம்பிக்கிறது. 1943ல் மெட்ராஸ் மாகாணத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையும், ஆங்கிலேயர்கள் கீழ் மக்கள் படும் திண்டாட்டத்தையும் மிக எளிமையாக காட்டியுள்ளனர். இரண்டாம் உலகப்போரின் தாக்கம், ஜப்பானிய படைகளால் மெட்ராஸ் மீது குண்டு வீசப்படும் என்ற செய்தி கிடைக்க கடலோர மருத்துவ முகாமில் சிகிச்சைக்காக வந்த மக்கள் அனைவரும் அலறியடித்து ஓடத்தொடங்க, அங்கு தன்னுடைய தம்பியை காப்பாற்ற வருகிறார் யோகி பாபு. 

Boat poster

யோகி பாபு மற்றும் அவரின் பாட்டி இந்த குண்டு வெடிப்பில் இருந்து தப்பித்து தனது தம்பியுடன்  படகில் நாடுகடலுக்கு செல்ல திட்டமிடுகிறார். அப்போது எதிர்பாராத விதமாக மேலும் 8 நபர்கள் அவருடன் படகில் ஏறி குண்டிலிருந்து தப்பிக்கிறார்கள். அப்போது கரையில் இருக்கும் ஆங்கிலேயருக்கு ஒரு தீவிரவாதி தப்பித்துள்ளார் என்ற செய்தி வருகிறது. அவர்கள் ஜப்பான் விமானங்கள் வீசும் குண்டில் இருந்து தப்பிக்கிறார்களா? அந்த படகில் உள்ள தீவிரவாதி யார்? என்பதையெல்லாம் பற்றிய வரலாற்று செய்திகளுடன் இயக்கியுள்ளார் சிம்பு தேவன். 

படத்தின் கதாபாத்திரங்கள் 

படத்தின் கதாநாயகன் யோகி பாபு ‘குமரன்’ என்ற படகோட்டி பாத்திரத்தில் நடித்துள்ளார். நக்கலான இயல்பான யோகி பாபுவை இந்த ‘Boat’ படத்திலும் பார்க்க முடிந்தது. தனது தம்பி, தங்கை மற்றும் பாட்டுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் ஒரு ஏழ்மையான படகோட்டி. மெட்ராஸில் பிறந்து வளர்ந்த இவர் தனது ஊரின் மீதும் அவர் செய்யும் தொழில் மீதும் பெருமை கொண்டவர். 

Yogi Babu with Leela

‘முத்துமாரி’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை குள்ளப்புளி லீலா. உணர்ச்சிகரமான காட்சிகளில் அவர் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு உடன் படம் முழுவதும் பயணித்து, நல்ல மாற்றம் தரும் பாத்திரமாக நடித்துள்ளார். 

நடிகர் சின்னி ஜெயந்த் ‘நாராயணன்’ என்ற பிராமண குமாஸ்தாவாக நடித்துள்ளார். அவரின் கதாபாத்திரம் படத்தில் சொல்ல வரும் கருத்துக்கள் பலவற்றிற்கு அடித்தளமாக மைந்துள்ளது. 1943ல் உள்ள சமூக ஏற்றக்குறைவும், சாதி மத பாகுபாடு என பல கருத்துக்கள் இவரின் கண்ணோட்டத்தில் தீமையாக காட்டியுள்ளனர். 

நடிகை கௌரி கிஷன் ‘லட்சுமி’ என்ற பாத்திரத்தில், அழகாக நடித்துள்ளார். எந்தவித ஏற்றத்தாழ்வும் பார்க்காத ஒரு இனிமையான பாத்திரம். இவரின் பாத்திரத்தை பயன்படுத்தி நல்லது கேட்டது என்ன என்று  பிரித்து காட்டுகிறார்கள். 

எம் எஸ் பாஸ்கர் அவர்களின் குணச்சித்திர பாத்திரங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், நேர்த்தியான நடிப்பும் ‘Boat‘ படத்தில் அவருடைய பாத்துகிறதுக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. அவரின் கதாபாத்திரம் அந்த படகில் ஒரு பெரிய பங்கு வகித்து. புரட்சிகரமான கருத்துக்களை பேசி, நடுநிலை வகித்து கருத்து சொல்லும் பாத்திரம் தான் ‘முத்தையா’. 

இவர்களுடன் படகில் பயணிக்கும் ‘விஜயா’ ஒரு ஆந்திரா மாநில பெண்மணி, ‘லால்’ ஒரு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேட், ‘ராஜா’ ஒரு தீவிரமான போராளி மற்றும் எழுத்தாளர். கேரளாவிலிருந்து முகம்மது அலி ஜின்னாஹ்வை பார்க்க செல்லும் நோக்கத்தில் இருப்பவர். 

Jesse Fox Allen

ஆங்கிலேய அதிகாரி ‘இர்வின் தாமஸ்’ திடீரென நடுக்கடலில் படகில் ஏறி அனைவரையும் அவரின் கட்டளைக்குள் வைத்திருப்பார். தமிழ் தெஇர்ந்த ஆங்கிலேய அதிகாரியாக வந்து அனைவரிடமும் தன்  துப்பாக்கி மூலம் உரையாடும் ஒரு கொடுமைக்கார அதிகாரி. 

இதில் தனித்துவமாக இருந்தது இவர் தான் என்று தனித்து கூற முடியாத அளவுக்கு அனைவரும் அவர்களின் தனித்துவத்தை புரிந்து கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக நடிகர் சின்னி ஜெயந்த், நடிகர் எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஷா ரா தங்களின் நடிப்பால் 2 மணி நேர படத்துக்கு அவசியம் தேவைப்படும் சுவாரசியத்தை  சேர்த்தனர். 

படத்தின் பலம் 

வரலாற்று கதையை அப்படியே சொல்லாமல் அதில் தன்னுடைய கற்பனையை கலந்து, மேலும் படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட Ernest Hemingway எழுதிய ‘The Old Man and The Sea’ மற்றும் ‘The Twelve Angry Men’ ஆகிய நாவல்களின் கதைகளை தழுவி எடுத்திருப்பது படத்தின் கதை ஓட்டத்துக்கு தீனியாக அமைந்தது. 

அனைத்து நடிகர்களும் அவர்களின் பங்கை சிறப்பாக செய்து எங்கும் பாத்திரத்தை விட்டு விலகாமல் இயல்பாக நடித்திருப்பதும், தனிப்பட்ட கருத்துக்களை முன் வைக்கும் பொது முரண்பாடு இருந்தாலும் அதை சமாளிக்கும் கருத்துடன் எழுதப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. 

அன்றைய அரசியல் மற்றும் சமூக சூழலை அலசி அதில் இன்றும் நடைமுறையில் இருக்கும் கருத்துக்களை பேசிய விதம் நன்று. வெவ்வேறு மொழி பேசும் நபர்கள், வெவ்வேறு சாதி மற்றும் அந்தஸ்தில் உள்ளவர்களை அந்த படகில் பயணிக்க வைத்தது கதையை மேலும் சுவாரசியமாக்கியது.

படத்தின் பலவீனம் 

படத்தின் கதை சுவாரசியமாகவும், தமிழ் சினிமாவிற்கு புதுசாக இருந்தாலும், ஒரு Survival படத்துக்கு அங்கங்கே பல திருப்பங்களும், கதை மாற்றமும் அவசியம். ‘Boat’ படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் பேச்சுவார்தையாக அமைந்து சலிப்பை ஏற்படுத்துகிறது. 

பல கருத்துக்களை முன்னிலை படுத்தி படம் முழுவதும் பேசியது கிளைமாக்சில் பூர்விக இடம் பற்றிய ஒன்றாக மாறியது சரியாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒன்றாக தென்படவில்லை. 

யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘Boat’ ஒரு நீளமான வரலாற்று உரையாடல் கதை. முதல் பாதியில் உள்ள கதையின் நீட்சி இரண்டாம் பாதியில் மாற்றங்கள் இல்லாமல் நகர்வது சலிப்பாக அமைகிற ஒரு திரைக்கதை. 

Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

©2025 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.