Home Cinema News BOAT படத்தின் ‘சோக்கா நானும் நிக்கிறேன்’ பாடல் வெளியாகியது! 

BOAT படத்தின் ‘சோக்கா நானும் நிக்கிறேன்’ பாடல் வெளியாகியது! 

யோகி பாபு நடிக்கும் ‘BOAT' படத்தின் முதல் பாடல் ‘சோக்கா நானும் நிக்கிறேன்' வெளியாகியுள்ளது. 

by Vinodhini Kumar

பிரபல இயக்குனர் சிம்பு தேவன், ஆங்கிலேயர் ஆட்சியில் அன்றைய மெட்ராஸ் நகரத்தில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக இயக்கி வருகிறார். ‘BOAT’ என பெயரிடப்பட்டுள்ள படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. 

BOAT‘ படத்தின் ‘சோக்கா நானும் நிக்கிறேன்….பேக்கா நீ பாக்குற’ என தொடங்கும் பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலுக்கு பழம்பெரும் பாடகி சுதா ரகுநாதன் குரல் கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில் கோல்ட் தேவராஜ் பாடல் வரிகள் எழுதியுள்ளார். மெட்ராஸ் பாஷை என சொல்லப்படும் ஸ்லாங்கில் உள்ள வரிகளுக்கு கர்னாடக சங்கீத ராகத்தில் மெட்டமைத்து உருவாக்கியுள்ளார் ஜிப்ரான். 

கேட்பதற்கு மிக புதுமையாக அமைந்துள்ள பாடலை சரிகம தமிழ் சேனலில் வெளியிட்டுள்ளனர். இந்த தகவலை தங்களின் வலைபக்கங்களில் பதிவிட்டும் பகிர்ந்துள்ளது படக்குழு. 

இந்த​ படத்தில் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன், மதுமிதா நடித்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. 

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.