நடிகர் யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன், மதுமிதா நடித்துள்ள படம் ‘போட்’. இந்த படத்தை ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘புலி’ ஆகிய பிரபல தமிழ் படங்களை இயக்கிய சிம்பு தேவன் இயக்குகிறார்.

நகைச்சுவையான படங்களை விரும்பி இயக்கும் இயக்குனர் சிம்பு தேவன், இந்த படத்தில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து ஒரு வரலாற்று கதையை எடுத்துள்ளார். வழக்கமான வரலாற்று படங்களை போல் இல்லாமல் நிஜத்தில் நடந்த சம்பவத்தை நகைச்சுவையாக கூறும் படமாக தெரிகிறது ‘BOAT‘.
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கதைக்களத்தில் குண்டு வெடிப்பு மற்றும் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு படகில் ஏறும் 10 பேர். அவரிடம் படகில் பயணிக்கும்போது தீடீரென பாரம் தாங்காமல் கப்பல் மூழ்கிக்கொண்டு இருக்க, யாராவது மூன்று நபர்கள் கடலில் குதிக்க வேண்டும். இதில் அந்த 10 பேருக்குள் நடக்கும் உரையாடல், தன்னை காப்பாற்றிக் கொள்ள என்னென்ன செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக பேசும் படம் தான் ‘BOAT’.
Presenting our next association for the release of @iyogibabu's #Boat !!
— Maali&Manvi_Movie Makers (@Maaliandmaanvi) July 8, 2024
A Survival Thriller releasing in theatres on Aug 2nd🛶
Produced by @maaliandmaanvi & @cde_off
Directed by @chimbu_deven
A @SakthiFilmFctry @sakthivelan_b release#முழுக்க_முழுக்க_கடலில் #BoatFromAug2nd pic.twitter.com/fseutO8N6z
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதை படத்தின் தயாரிப்பாளர்கள் மல்லி & மான்வி மூவி மேக்கர்ஸ் தங்களின் வலைதளங்களில் பதிவிட்டனர். இயக்குனர் சிம்பு தேவன் இணைந்து தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு மாதம் 2ம் தேதி வெளியாகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]