தினகரன் சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ள படம் ‘பாட்டல் ராதா’. குரு சோமசுந்தரம் நடிப்பில் குடி போதைக்கு அடிமையாகும் நபரின் வாழ்க்கையில் நடக்கும் கதை தான் ‘பாட்டல் ராதா’. நடிகை சஞ்சனா நடராஜன் இந்த படத்தில் குரு சோமசுந்தரத்தின் பாத்திரத்தின் மனைவியாக நடிக்கிறார் ஜான் விஜய் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். லொல்லு சபா மாறன், ஆண்டனி துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
Watch the Emotions, Drama & Chaos from the world of #BottleRadha unravel 🤩💥
— Neelam Productions (@officialneelam) July 1, 2024
Presenting you the #BottleRadhaTeaser ✨
▶️ https://t.co/bM3WrqlrXP
A film by @Dhinakaranyoji
A @RSeanRoldan Musical
Starring @gurusoms @sanchana_n @actorjohnvijay #Maaran #Antony @PariElavazaghan… pic.twitter.com/BpQdO7BGOz
கொத்தனார் வேலை செய்யும் ஒரு சாமானிய மனிதன் எப்படி சம்பாதிக்கும் பணத்தை வைத்து குடி போதைக்கு அடிமையாக வாழ்கிறார் என்றும் இந்த பழக்கத்தால் அவரின் குடும்பம் எப்படி பாதிக்கிறது என்பதை நகைச்சுவையான திரைக்கதையில் எடுத்துள்ளார் தினகரன் சிவலிங்கம். ஷான் ரோல்டன் இசையில் ‘பாட்டல் ராதா’ படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டீஸரை நடிகர்கள் சிம்பு மற்றும் ஆர்யா வெளியிட்டுள்ளார்கள். இதை இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]