தமிழில் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா, ஜோக்கர் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஹீரோவாக ‘பாட்டல் ராதா’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
It all starts with a Bottle ✨
— Neelam Productions (@officialneelam) June 24, 2024
Buckle up for a high like no other! It's going to be an entertaining ride!
Presenting you the first look of #BottleRadha 🍾
A film by @Dhinakaranyoji
A @RSeanRoldan Musical
Starring @gurusoms @sanchana_n @actorjohnvijay #Maaran #Antony… pic.twitter.com/4KnwiGncwO
‘Bottle Radha’ படத்தை புதிய இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயங்குகிறார். சமீபத்தில் சினிமா எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு கொடுத்த நேரலையில் இந்த படம் ஒரு காமெடி கலந்த சீரியஸ் படமாக அமைந்துள்ளது என தெரிவித்தார் இயக்குனர் தினகரன். ‘பாட்டல் ராதா’ படத்தில் கொத்தனார் ஆக வேலை செய்து வரும் குரு சோமசுந்தரம் தன்னுடைய குடிப்பழக்கத்தால் குடும்பத்தை இழக்கிறார். அதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பது தான் கதை.
இந்த படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘ஜிகர்தண்டா டபுள் X’ படத்தில் நடித்த சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொல்லு சபா மாறன் மற்றும் ஆண்டனி நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் ரூபேஷ், எடிட்டிங் சங்கத்தமிழன். பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் இணைந்து வழங்குகிறார்கள்.
‘Bottle Radha’ படம் 2024ல் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பாட்டல் ராதா’ படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் என தெரிகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]