இந்த ஆண்டின் முதல் பாதியில் ஒரு சில படங்கள் எதிர்பாராத விதமாக வசூலில் கலக்கியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 85 படங்களுக்கு மேல் தமிழில் ரிலீஸ் ஆகியுள்ளது. ரிலீஸ் ஆன படங்களில் பெரும்பாலும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதில் பெரிய நடிகர்களின் படங்களும் கூட விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.
இத்தகைய சூழ்நிலையில் வேறு மொழி படங்கள் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று Box Office கலெக்சன் அள்ளியது. ஒரு சில படங்கள் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் வசூலில் ரீதியாக தோல்வியடைந்தது. கமல், விக்ரம் என முக்கிய நடிகர்களின் படங்கள் இந்த ஆண்டின் இரண்டாவது பாதியில் வரவுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸில் கலக்கிய படங்கள்.
பொங்கல் சமயம் வெளியான கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டில் 100-கோடிக்கு மேல் வசூல் செய்து கலக்கியது. தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சுதீப் கிருஷ்ணன், அதிதி பாலன் ஆகியோர் நடித்திருந்தனர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க சத்யா ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. இதுவரை உலகம் முழுவதும் 104-கோடி வசூல் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் Box Office-ல் அதிகளவு வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சுந்தர் சி இயக்கி நடித்து மே 3-ல் வெளியான அரண்மனை 4 படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, வி.டி.வி. கணேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அரண்மனை 4 படத்தை குஷ்பூ சுந்தர் மற்றும் அருண் குமார் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளராக HIPHOP ஆதி, எடிட்டராக பென்னி ஆலிவர் பணியாற்றியுள்ளனர். தற்போது ரிலீஸ் ஆன அரண்மனை 4 100-கோடி வரை வசூல் செய்து Box Office ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

பொங்கல் சமயம் ரிலீஸ் ஆன அயலான் படம் ஏலியன் ஒன்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங்க், கருணாகரன், யோகி பாபு என காமெடி கலந்து எடுக்கப்பட்டது. கேப்டன் மில்லர் மற்றும் அயலான் என இரண்டு படங்களும் பொங்கல் சமயம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் KJR ஸ்டூடியோ நிறுவனம் படத்தை வெளியிட்டது. Box Office கலெக்சனில் 100-கோடி வரை வசூல் செய்து கலக்கியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்னு விஷால், விக்ராந்த், லிவிங்ஸ்டன், செந்தில் ஆகியோர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான படம் லால் சலாம். லைகா ப்ரொடக்சன் தயாரிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியானது. கிரிக்கெட் விளையாட்டில் செய்யும் ஒரு சில அரசியலை கொண்டு படம் எடுக்கப்பட்டது. எதிர்பார்த்த வசூல் ஆகவில்லை என்றாலும் கிட்டத்தட்ட 35-கோடிக்கு மேல் Box Office-ல் கலெக்சன் ஆகியுள்ளது. இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் 4-வது இடத்தில் உள்ளது.

இந்த ஆண்டில் Box Office கலெக்சன் குறைவாக இருந்தாலும் blue star, lover போன்ற படங்கள் ரசிகர்கள் ரசிக்கும் விதமாக இருந்தது. இந்த ஆண்டில் Manjummel boys, The Goat Life(ஆடுஜீவிதம்), ஆவேசம், பிரேமலு, shaitaan என மற்ற மொழி படங்கள் கூட தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டில் பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவில் படங்கள் வெற்றியடையவில்லை என்பது கவலைக்குரியது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]