நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தென்னிந்திய சினிமா துறைகளில் முன்னணி நடிகையாக புகழில் உச்சியில் உலா வருபவர். இவர் தற்போது வெப் தொடரில் முதல் முறையாக நடித்துள்ளார். புது இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கலா எழுதி இயக்கியுள்ள ஒரு சுவாரசியமான கிரைம் திரில்லர் தொடர் ‘Brinda‘. Sony Liv செயலியில் 8 எபிசோடுகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘Brinda’ சீரிஸ் கதைக்களம்

முதல் எபிசோடில் ஆரம்பமே ஒரு கிராமத்தில் தெரியாத ஒரு உயிர்கொல்லும் வியாதி பரவி வருகிறது. அந்த வியாதியை விரட்டியடிக்க அந்த ஊர் மக்கள் கடவுளிடம் வேண்டி உயிர் பலி கொடுக்க நினைக்கிறார்கள். அதற்கு ஒரு பெண் குழந்தையை தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த குழந்தையை காப்பாற்ற அவளின் அம்மா மற்றும் அண்ணன் மூவரும் தப்பிக்க நினைக்கிறார்கள். இதை அறிந்த ஊர் மக்கள் அவர்களை துரத்த, அந்த குழந்தையை ஒரு வண்டியில் ஏற்றி அனுப்பிவிடுகிறார்கள். இடையில் அந்த தாய்யை ஊர் மக்கள் கொன்றுவிட, அவளின் அண்ணன் தப்பிக்கிறார்.
அந்த குழந்தை தான் த்ரிஷா (Brinda), வளர்ந்து வந்து போலீஸ் வேலை செய்யும் அவளுக்கு ஒரு தொடர் கொலைகள் நடக்கும் வழக்கு கிடைக்கிறது. இதை அவர் எப்படி தீர்க்கிறார்? கொலையாளி யார்? தொடர் கொலைகளின் பின்னணி என்ன? என 8 எபிசோடுகளும் விறுவிறுப்பாக உள்ளது. ஒரு பெண் காவல் அதிகாரியாக அவரின் தனிப்பட்ட பிரச்சனைகளையும் தாண்டி எப்படி சமாளித்து உண்மைகளை கண்டறிகிறார் என்பது மற்றொரு கதைக்களமாக அமைந்துள்ளது.

இந்த சீரிஸில் நடித்துள்ள அணைத்து நடிகர்களும் அவர்களின் கதாபாத்திரத்துக்கு எந்தவித குறையும் இல்லாமல் நடித்துள்ளனர். நடிகை த்ரிஷா ஒரு காவல் அதிகாரியாக உணர்ச்சிகரமான நடிப்பை, கதைக்கு தேவையான முறையில் கொடுத்துள்ளார்.
மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன் ‘சத்யா’ என்ற பாத்திரத்தில் மிக அருமையாக நடித்துள்ளார். ஒரு முக்கிய பாத்திரமாக கடைசிவரை பயணித்து இந்த கதையில் த்ரில் சேர்த்துள்ளார். அதிலும் முக்கியமாக த்ரிஷாவுடன் வரும் காட்சிகளில் அவரின் நடிப்பு பிரமாதம்.
நடிகர் ரவீந்திர விஜய் SI சாரதியாக நடித்துள்ளார். அவரின் இயல்பான துல்லியமான நடிப்பை இதிலும் வெளிப்படுத்தியுள்ளார். இவரின் கதாபாத்திரமும் இந்த கதையை பல திருப்பங்களுடன் பயணிக்க உதவுகிறது.
Vijay மற்றும் Trisha ஜோடியில் மாஸ் காட்டி ரசிக்க வைத்த படங்கள்…
‘பிருந்தா’ தொடரின் பலம்
மற்ற கிரைம் திரில்லர் கதைகளை போல சித்திக்கும் இரண்டு எபிசோடுகள் வரை கொலையாளி யாராக இருக்கும்? ஏன் இந்த தொடர் கொலைகளில் ஈடு படுகிறார்கள் என்ற கேள்விகளை வைத்து கதையை மக்களிடம் விளக்கியிருப்பார்கள். அனால் அங்கு நடக்கும் ஒரு திருப்பம் தான் கடைசி எபிசோடுகள் வரை கதையை விடாமல் பார்க்கவைக்கும் தூண்டில். இரண்டாவது எபிசோடில் இவர் தான் கொலையாளி என்று வெளிப்பட, கதை சூடுபிடிக்க தொடங்குகிறது.

திரைக்கதையும் ஒரு நல்ல கிரைம் திரில்லர் கதைக்கு தகுந்தவாறு எழுதியுள்ளார் இயக்குனர் சூர்யா மனோஜ் வாங்கலா. படத்தின் பல இடங்களில் திரைக்கதையும் பின்னணி இசையும் கவனத்தை முழுமையாக தக்கவைப்பது இந்த தொடரின் பெரிய பலம்.
‘பிருந்தா’ தொடரின் பலவீனம்
தொடர் கொலை வழக்கை கையில் எடுக்கும் காவல் துறையில் த்ரிஷா மட்டுமே பெரும்பாலான முடிவுகளை எடுப்பதும், பல சிக்கல்களை சரிசெய்யும் பாத்திரமாக இருப்பது மற்ற பாத்திரங்களுக்கான முக்கியத்துவத்தை சற்றே குறைப்பதாக உள்ளது.

தொடக்கம் முதல் நம்ம கட்டி போடும் திரைக்கதை, கடைசில் இரண்டு எபிசோடுகளில் மெதுவாகிறது. அதிலும் flashback காட்சிகள் கதையின் வேகத்தை குறைத்து கிளைமாக்ஸ் வரை இழுத்தடிப்பது ஒரு பலவீனமாக அமைந்துள்ளது.
இதற்கு முன் தமிழில் வெளியான திரில்லர் கலந்த கிரைம் கதைகளின் பெரிய கதைக்களம் இல்லையென்றாலும், குறிப்பிட்ட சமூக பிரச்னையை கருத்தாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது இந்த தொடர். பல பிரபல கிரைம் கதைகளை போலவே ஒரு முறை பார்க்கலாம் என்ற தீர்ப்பு தான் ‘Brinda’ வெப் சீரிஸுக்கும்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]