பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் சின்னத்திரையில் நடிகராகவும் வளம் வந்தவர் நடிகர் ராஜு. இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக ‘பண் பட்டர் ஜாம்’ என்ற படத்தில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் கலக்கலான டீசர் இன்று வெளியாகி குதூகலமான வரவேற்பை பெற்றுள்ளது.
Enjoy the fun-filled #BunButterJam Teaser now! 😍🥳
— Sony Music South India (@SonyMusicSouth) December 21, 2024
➡️ https://t.co/ozjjiweOEU
A @nivaskprasanna Musical@RMirdath @RainofarrowsENT @sureshs1202#BBJ #பன்பட்டர்ஜாம் #BunButterJamMovie @rajuactor91 @bt_bhavya pic.twitter.com/5QrCshghs0
ராகவ் மிர்தாத் இயக்கத்தில் சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் ஒரு கமர்ஷியல் காமெடி படமாக தெரியும் ‘பங பட்டர் ஜாம்’ படத்தில் நடிகர் ராஜுவிற்கு இரண்டு கதாநாயகிகள் உள்ளனர். மலையாள மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஆத்யா பிரசாத் ஒரு நாயகியாகவும் சமீபத்தில் விஜய் டிவியின் மற்றொறு சினிமா வரவு ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ‘ஜோ’ படத்தில் நடித்த பவ்யா த்ரிகா மற்றொரு நாயகியாகவும் நடிக்கிறார்.
Enjoy the fun filled #BunButterJam Teaser exclusively from today in Theaters near you 🎦🍿
— Rain Of Arrows Entertainment (@RainofarrowsENT) December 20, 2024
Releasing on YouTube from tomorrow !!
A @nivaskprasanna Musical
Written & Directed by @RMirdath
Produced by @RainofarrowsENT @sureshs1202#BBJ #பன்பட்டர்ஜாம் #BunButterJamMovie… pic.twitter.com/CxcVxLicqd
நக்கலாக பேசி நகைச்சுவையாக வாழ்க்கையை கடத்தும் இளைஞராக ராஜு நடிக்க, இவரின் காதலியாக பவ்யா வருகிறார். மற்றொரு கதாநாயகி கல்யாணத்திற்காக பெண் வீட்டில் பார்க்கும் பெண்ணாக, முதலில் இப்போது பெருமளவில் பேசப்படும் ‘Boomer’ என்று அழைக்கப்படும் நபராக கட்டப்பட்டு பின்னர் அதற்கு மாறாக தெரிகிறார்.
நகைச்சுவையாக தொடங்கி முற்றிலும் நகைச்சுவையாகவே அமைந்துள்ளது இன்று வெளியான டீசர். ‘பண் பட்டர் ஜாம்’ படத்தில் ராஜுவின் பெற்றோர்களாக நடிகர் சார்லி மற்றும் நடிகை சரண்யா நடிக்கிறார்கள். இவர்களை தவிர நடிகை பிரியதர்ஷினி, மைகேல் தங்கதுரை, VJ பப்பு ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். படம் எப்போது வெளியாகும் என அறிவிப்பு ஏதும் இல்லை.