கேன்ஸ் திரைப்பட விழாவில் பாயல் கப்பாடியா இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘All we imagine as light’ படம் கிராண்ட் ப்ரீ விருதை வென்றது.
பாயல் கப்பாடியா இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘All we imagine as light’ படம், உலக திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்டது. இயக்குனர் பாயல் கப்பாடியாவின் முதல் முழு நீள படமான இது, கிராண்ட் ப்ரீ விருதுக்கு தகுதியாகி உலகின் பாராட்டத்தக்க பிரபல இயக்குனர்களின் படங்களுடன் போட்டியிட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் உலக சினிமாவின் பல மொழி படங்கள் திரையிடப்பட்டு அதில் சிறந்த படங்களை விருதளித்து கவுரவிப்பார்கள். இந்நிலையில் இந்தியாவில் இருந்து பாயல் கப்பாடியாவின் படம் திரையிடப்பட்டது. மூன்று பெண்களின் அன்றாட வாழ்க்கையை, மும்பை நகரின் பரபரப்பான மாற்றங்களும் அதை புறம் தள்ளி நகர வாழ்க்கையை மழையால் மூடி, இரவின் கதகதப்பான காட்சிகள் மூலம் பார்ப்பவர்களை சட்டென்று கவர்ந்துள்ளார் இயக்குனர்.
கேரளாவில் இருந்து மும்பைக்கு செவிலியராக வேலைக்கு செல்லும் மூன்று பெண்களின் தினசரி வாழ்க்கையும், ஏக்கங்களும் கசப்பான நிஜவாழ்க்கை சூழலையும் பேசும் படம் ‘All we imagine as light’. படத்தின் பெயர் கூட படத்தை பார்த்து உணர்வதன் நீட்சியாக ஒரு எண்ணமாக தான் வைத்துள்ளார் பாயல் கப்பாடியா. படத்தின் முக்கிய பாத்திரத்தில் நடிகை கானி குஸ்ருத்தி நடித்திருப்பார். இந்த படத்தில் பிரபா என்ற செவிலியராக நடித்து, கல்யாணமான உடனே வெளிநாட்டுக்கு சென்ற கணவனின் வருகையை நினைத்து வாழும் பெண்.
பாயல் கப்பாடியா இந்தியாவில் இருந்து இந்த கிராண்ட் ப்ரீ விருதை பெரும் முதல் இயக்குனர் என்ற சாதனையும் படைத்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு ஒரு இந்திய படம் கேன்ஸ் பட விழாவில் போட்டியிட்டுள்ளது.
As an Indian and a devoted champion of the independent film circuit, I’m delighted by the victory of @PayalKapadia86 and Anasuya Sengupta at Cannes Film Festival, 2024.
— Kamal Haasan (@ikamalhaasan) May 28, 2024
Your achievements resonate deeply within the corridors of Indian cinema, where the independent film industry… pic.twitter.com/4jf0c2NomU
இந்த வெற்றியை பாராட்டி பல இந்திய பிரபலங்கள் தங்களின் வாழ்த்தை வலைதளங்களில் பகிர்ந்தனர். உலக நாயகன் கமல் ஹாசனும் இதில் இணைந்து பாயல் கப்பாடியா மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘ஒரு இந்தியராகவும் அர்பணிப்பான இன்டிபென்டன்ட படங்களின் ஆதரவாளராகவும் இந்த வெற்றி இந்தியா முழுவதும் படைப்பாற்றல், பதிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டு’ என அதில் கூறியுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]