தனுஷ், சிவ ராஜ்குமார், சந்திப் கிஷன், பிரியங்கா மோகன், அதிதி பாலன் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளிவந்த படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்த படம் வெளியான சமயம் பெரிதாக பாராட்டப்பட வில்லை.
Thrilled to share that #CaptainMiller has won the Best Foreign Film award at the UK’s National Awards! Glad to have contributed as one of the writers. Big cheers and thanks to #ArunMatheswaran, @dhanushkraja, @gvprakash, and the entire team! pic.twitter.com/OF56F8ZE5a
— Madhan Karky (@madhankarky) July 4, 2024
1930களில் பிரிட்டிஷ் இந்தியாவில் நடக்கும் கதையில், போராளிகள் மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் உண்டாகும் சச்சரவு பற்றிய படம். சாதி பிரிவினை மற்றும் சுத்ந்திரப் பற்று ஆகியவை பேசப்படும் படம். சமீபத்தில் SS மியூசிக் பக்கத்திற்கு பேட்டி தந்த இயக்குனர் அருண் மாதேஸ்வரன், ‘கேப்டன் மில்லர்’ படத்தின் பல காட்சிகள் பற்றியும், இந்த படத்திற்காக அவர்கள் செய்த உழைப்பு என அனைத்தையும் பகிர்ந்திருந்தார்.

லண்டனில் நேஷனல் ஃபிலிம் அவார்ட் என்ற சர்வதேச விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு படமாக ‘கேப்டன் மில்லர்’ படத்தை தேர்வு செய்துள்ளனர். இதை இந்த படத்தின் துணை திரைக்கதை எழுத்தாளரும் கவிஞருமான மதன் கார்க்கி தனது வலைதளத்தில் பகிர்நதுள்ளார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]