தமிழில் சரோஜா படத்தில் நடித்து பின்னர் ஹீரோவாக ‘மேயாத மான்’, ‘கப்பல்’ ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் வைபவ். வெங்கட் பிரபுவின் படங்களில் அடிக்கடி பார்க்கக்கூடிய நடிகர்களில் இவரும் ஒருவர். அடுத்ததாக ‘Chennai City Gangster’ என்ற படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

2024ல் நடிகர் வைபவ் தன்னுடைய 25வது படத்தை முடித்து தற்போது ‘Chennai City Gangster’ என்ற காமெடி படத்தில் நடித்துள்ளார். விக்ரம் ராஜேஸ்வர் மற்றும் அருண் கேஷவ் இணைந்து எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் ‘பாண்டி’ என்ற பாத்திரத்தில் நடிக்கிறார். கொள்ளை அடிக்க திட்டம்போடும் கதையில் காமெடி கலந்து உருவாகியுள்ள இப்படத்தை BTG யூனிவேர்சல் நிறுவனம் தயாரிக்கிறது.
Start your Friday with #MeyyaMummari – the video song from #ChennaiCityGangsters is out now 🕺🏻💃
— BTG Universal (@BTGUniversal) August 30, 2024
▶️ https://t.co/6PRCRFy8rv
An @immancomposer musical.@bbobby @ManojBeno @actor_vaibhav @AthulyaOfficial @Mani_Rajeshh #VikramRajeshwar #ArunKeshav #AnandRaj @redin_kingsley… pic.twitter.com/WeWnA6VmxP
பெரிய படக்குழுவுடன் உருவாகும் காமெடி படத்தில் வைபவ் உடன் நடிகை அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மணிகண்டன் ராஜேஷ், ஜான் விஜய், ரேட்டிங் கிங்ஸ்லி, லிவிங்ஸ்டன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் பாடல் ‘மெய்யா மும்மாரி’ பாடல் வெளியானது. இப்படத்துக்கு டி. இமான் இசையமைக்கிறார்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]