நடப்பாண்டிற்க்கான IPL 2024 சீசன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர் பட்டாளங்களுக்கு மத்தியில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதினர். சென்னை அணியின் கேப்டனாக கடந்த 14 வருடமாக இருந்த வந்த தோனி இம்முறை தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ரூட்டுராஜ்க்கு கொடுத்து விட்டார். தோனிக்கு இது கடைசி சீசன் ஆக இருக்க வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் பெரும் அளவில் திரண்டு வந்துள்ளனர். மறுபுறம் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் கோலி ஆட்டத்தை காண ரசிகர்கள் அணிதிரட்டி வந்திருந்தனர்.
தற்போதைய கால கட்டத்தில் கிரிக்கெட், சினிமா இரண்டும் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. திரை பிரபலங்கள் பொழுதுபோக்கிற்க்காக கிரிக்கெட் விளையாடி வந்தனர். பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம், கன்னட , ஹிந்தி என பல்வேறு மொழி நடிகர்கள் ஒன்றிணைந்து சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் தொடரை கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். இதில் உலகத்தரத்தில் கிரிக்கெட் விளையாடுவதை போன்றே எல்லாவித ரூல்ஸ் கொண்டும் விளையாடி வருகின்றனர். இதைக்கான கிரிக்கெட் பிரபலங்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு மைதானத்தின் நடுவில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இந்தியா தேசிய கொடியை எடுத்துக்கொண்டு வந்தார். அதன் பின்னர் பாலிவுட் நடிகர் டைகர் ஷொராஃப், அக்ஷய் குமார் இருவரும் ஒரு சில பாட்டிற்கு நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். சோனு நிகம் மற்றும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏஆர் ரகுமான் சேர்ந்து தமிழ், ஹிந்தி என பல பாடல்கள் பாடி அசத்தினர். இதற்கிடையில் ரகுமான் குழுவினர் தல தோனிக்காக “நீ சிங்கம் தான் டா” என்ற பாடலை பாடி அசத்தியுள்ளார். வாணவேடிக்கைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சேப்பாக்கம் மைதானத்தில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பிண்ணி, செயலாளர் ஜெய் ஷா, மற்றும் இரு அணியின் கேப்டன்களான ரூட்டுராஜ், டூ பிளசிஸ் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆண்டிற்கான கோப்பையை அறிமுகம் செய்யப்பட்டது.
பெரும்பாலும் சென்னையில் நடைபெறும் போட்டி என்பதால் தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பல்லாயிரம் ரசிகர்களுடன் போட்டியை காண ஆர்வமாக வருவதுண்டு. அந்த வகையில் நடிகர் சதிஷ் சென்னை அணியின் தீவிர ரசிகனாக மைதானத்திற்கு வந்திருந்தார். நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினி, ஷாமிலி, ரிச்சார்ட் ஆகியோரும் போட்டியை கண்டுகளிக்க வந்திருந்தனர். நடிகர் தனுஷ் மற்றும் இரண்டு மகன்களான லிங்கா, யாத்ரா ஆகியோரும் போட்டியை காண வந்துள்ளனர். விளையாட்டு மற்றும் இளைஞர் நல அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகா ஆகியோரும் மைதானத்திற்கு வருகை புரிந்தனர்.
பெரும் ஆரவாரத்திற்கிடையே நடைபெற்ற போட்டியில் முதலில் டாஸ் வெற்று பேட்டிங் செய்தது பெங்களூரு அணி. சென்னை அணிக்கு 174 ரன்கள் இலக்காக வைத்தது பெங்களூரு. இரண்டாவது இன்னிங்ஸில் 8 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில் சென்னை அணி இலக்கை எட்டியது. சீசன் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கியதால் சென்னை ரசிகர்கள் மைதானத்திலேயே மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். போட்டியின் இடையில் கில்லி படத்தில் இருந்து “அப்படி போடு அப்படி போடு” என்ற பாடல் படும் பொது பௌண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கோலி பாடலுக்கு ஏற்ப நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். போட்டியை காண வந்த பிரபலங்கள் மைதானத்தில் இருப்பதை போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]