Home Cinema News ‘சீயான்’ விக்ரமுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர்?

‘சீயான்’ விக்ரமுடன் கூட்டணி அமைக்கப்போகிறாரா ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ பட இயக்குநர்?

by Sivaanantham RB

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் கைவசம் ‘தங்கலான்‘, ‘துருவ நட்சத்திரம்‘, ‘சீயான் 62’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘துருவ நட்சத்திரம்’ படத்துக்கு இன்னும் கிரீன் சிக்னல் கிடைக்காமல் ரிலீஸுக்கு வெயிட்டிங் லிஸ்டிலேயே இருக்கிறது.

பா.இரஞ்சித் இயக்கியிருக்கும் ‘தங்கலான்’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. இம்மாத இறுதியில் இதன் ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அருண் குமார் இயக்கும் ‘சீயான் 62’ படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

Vikram 1657365376595 1657617365277 1657617365277

இந்நிலையில், விக்ரம் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு யெஸ் சொல்லியுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.  சீயானின் 63-வது படமான இதனை பிரபல மலையாள இயக்குநர் சிதம்பரம் இயக்கவுள்ளாராம்.

இவர் கடைசியாக இயக்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்‘ என்ற மலையாள திரைப்படம் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டு ஆடியன்ஸிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், பாக்ஸ் ஆஃபிஸிலும் இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.