கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் கைவசம் ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62′ என 3 படங்கள் உள்ளது. இதில் ‘தங்கலான்’ஐ ‘கபாலி, காலா’ படங்களின் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில், இதன் டீசர் ரிலீஸாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேற லெவலில் செட் செய்து விட்டது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, டேனியல் கால்டாகிரோன், ஹரிகிருஷ்ணன், முத்துக்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
An iconic talent, inspiring awe with grit and glory, delivering performances that defy expectations ❤️
— Studio Green (@StudioGreen2) April 17, 2024
Happy Birthday @chiyaan #Thangalaan 🏹 Awaiting your fiery presence on big screens! #HBDChiyaan @Thangalaan @beemji @GnanavelrajaKe #StudioGreen #JyotiDeshpande @jiostudios… pic.twitter.com/gflnUS1woV
இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துக் கொண்டிருக்கிறார், ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் மெகா பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
இன்று (ஏப்ரல் 17-ஆம் தேதி) நடிகர் ‘சீயான்’ விக்ரமின் பிறந்தநாள் என்பதால், இயக்குநர் பா.இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் இப்படத்தின் மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]