Home Cinema News ‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் பா.இரஞ்சித்!

‘சீயான்’ விக்ரமின் ‘தங்கலான்’ ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் பா.இரஞ்சித்!

விக்ரமின் 'தங்கலான்' படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது, இப்படத்தை வருகிற ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

by Santhiya Lakshmi

கோலிவுட்டில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘சீயான்’ விக்ரம் கைவசம் ‘தங்கலான்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சீயான் 62’ ஆகிய மூன்று படங்கள் உள்ளது. இதில் ‘தங்கலான்’ படத்தை ‘மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை’ புகழ் இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

24 66124ad966009

கடந்த ஆண்டு (2023) இதன் டீசர் வெளியான நாளில் இருந்தே ஆடியன்ஸின் எக்ஸ்பெக்டேஷன் இப்படத்தின் மீது அதிகமாக உள்ளது. இதில் ‘சீயான்’ விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன், பசுபதி, பார்வதி, டேனியல் கால்டாகிரோன், ஹரிகிருஷ்ணன், முத்துக்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துக் கொண்டிருக்கும் இதற்கு ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

தற்போது, இப்படத்தை வருகிற ஜூன் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாதம் (ஏப்ரல்) 17-ஆம் தேதி விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

You may also like

Follow Us

Subscribe

Get the latest Tamil cinema news in Tamil on Kollywood Glam. From celebrity news to actor and actress photos, videos, updates, தமிழ் சினிமா செய்திகள் and more.

 

©2024 Kollywood Glam, Media News Company.

All Right Reserved.