நடிகர் ‘சியான்’ விக்ரம் அடுத்ததாக தன்னுடைய 63வது படத்தில் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. சாந்தி டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கத்தில் இந்த படம் இயக்கப்படுகிறது. இந்த படம் உலகராசிகர்களை கவரும் விடத்த்தில் உருவாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் மடோன் அஸ்வின் ஏற்கனவே சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், யோகி பாபு, சரிதா ஆகியோர் நடித்த ‘மாவீரன்’ படத்தை இயக்கினார். இதையடுத்து இரண்டாவது முறையாக நடிகர் விக்ரமின் படத்தை இயக்கவிருக்கிறார். இதை படத்தை பற்றிய வேறு தகவல்கள் வெளியாகவில்லை.
Extremely happy to announce our Production No.3 with @chiyaan sir for #Chiyaan63 ! Thank you for letting us to be a part of your incredible journey sir!
— Shanthi Talkies (@ShanthiTalkies) December 13, 2024
It’s a pleasure to work with @madonneashwin for the second time! Looking forward to have yet another memorable experience!… pic.twitter.com/AUcq8VyWRb
இதனை தயாரிப்பு நிறுவனம் இன்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர், அதில் “எங்களின் தயாரிப்பில் 3வது படத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி. விக்ரம் #Chiyaan63க்கு சார்! உங்கள் அபாரமான பயணத்தின் ஒரு பகுதியாக எங்களை அனுமதித்ததற்கு நன்றி! இயக்குனர் மடோன் அஷ்வினுடன் இரண்டாவது முறையாக வேலை செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது இன்னொரு மறக்கமுடியாத அனுபவத்தை எதிர்பார்க்கிறேன்!” என தயாரிப்பாளர் அருண் விஷ்வா பதிவிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து ‘சித்தா’ படத்தை இயக்கிய SU அருண்குமார் இயக்கியுள்ள ‘வீர தீர சூரன் 2’ படத்திலும் நடித்து, அதன் முன்னோட்டம் வெளியானது குறிப்பிடத்தக்கது.