தொலைக்காட்சி தொடர்களிலும் பல திரைப்படங்களிலும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்த நடிகர் லொள்ளு சபா புகழ் சேஷு சென்னையில் காலமானார். அவருடைய வயது அறுபது. பத்து நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் மாரடைப்பால் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்பு நலமாக உள்ளனர் என்று செய்தி வெளியானது. ஆனால் சற்று முன்பு அவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. இது திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்றே கூறலாம்.
இவர் இயற்பெயர் லக்ஷ்மி நாராயணன், பிரபல விஜய் தொலைகாட்சியில் வெளியான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். திரைபடங்களில் நடிக்க ஆர்வமாக இருந்த போது 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் நடித்தார், அதற்க்கு பின் இவரது நகைச்சுவை திறமையால் அனைவராலும் கவரப்பட்டார். அதன் பின் சந்தானத்துடன் பல படங்களில் நடித்து தன திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இவர் நடித்து திரைக்கு வந்த கடைசி படம் வடக்குபட்டி ராமசாமி. இங்க நான்தான் ராஜா படத்தில் நடித்துள்ளார் ஆனால் இன்னும் திரைக்கு வரவில்லை. சமூக வலைதளங்களில் இவருடைய புகைப்படங்கள் தான் மீம் டெம்ப்ளேட் ஆக திகழ்ந்துவருகின்றன.
இந்த நிலையில் இவர் மாரடைப்பால் இறந்துவிட்டார். இவர் கொரானா காலங்களில் மக்களுக்கு பல உதவிகளை செய்த்துள்ளார். இவரை மருத்துவர்கள் மாரடைப்பு இருப்பதால் அதிக எடை தூக்ககூடாது என்று கூறியிருந்தும் கூட மக்களுக்கு உதவி செய்வதற்காக தானே சென்று மளிகை பொருட்களையும் அரிசி போன்ற பொருட்களையும் வாங்கிவருவார். இந்த வேலை தான் எனக்கு பிடிதிருக்கிறது என்று கூறி கொரானா காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக இருந்து அனைவராலும் புகழப்பட்டார்.
இவருடைய இழப்பு திரையுலகிற்கும், சென்னை வாசிகளுக்கும் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]