நடிகர் Soori தன்னுடைய எளிமையான மொழியாலும், அர்ப்பணிப்பான நடிப்பாலும் சினிமாவில் சிறு வேடங்கள் முதல் தற்போது ‘Viduthalai’, ‘Kottukkaali’, ‘Garudan’ படங்களின் நாயகனாக மாறியது எப்படி?!
தமிழ் சினிமாவில் நடிகர் Soori கடந்து வந்த பாதையை பற்றி சமீபத்தில் வெளிப்படையாக பல நேர்காணலில் பேசியுள்ளார். அதிலும் முக்கியமாக தனது கடுமையான இளம் வயது முயற்சிகளையும் தற்போது ‘Viduthalai’, ‘Kottukkaali’, ‘Garudan’ படங்கள் வரை அவரின் வளர்ச்சி அளப்பரியது.

சமீபத்தில் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்துள்ள நடிகர் Soori, தன்னுடைய வாழ்க்கை பயணத்தை சில நேர்காணலில் பகிர்ந்து வருகிறார். அதில் அவர் கடந்து வந்த கடினமான காலங்கள், சந்தித்த சிக்கல்கள், எப்படி நகைச்சுவை நடிப்பில் இருந்து கதாநாயகனாக மாற்றம் பெற்றார் என்றெல்லாம் பற்றி விரிவாக மனம்விட்டுப் பேசியுள்ளார். மதுரையில் ராமனாக பிறந்து தமிழ் சினிமா கொண்டாடும் Soori -யாக எப்படி மாறினார் என பார்க்கலாம்.
நடிகர் சூரி மதுரையில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, மேடை நாடகங்கள் வழியாக நடிப்பின் மீது பற்று கொண்டு பலரைப் போல் சென்னைக்கு வந்தவர். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களிலும், அன்றாடம் வாழ்க்கையை நகர்த்த சினிமாவில் பல துறைகளில் வேலை செய்தவர். பின்னர் நகைச்சுவை நடிகராக பல வெற்றி படங்கள் தந்தவர். நகைச்சுவையில் தனக்கே உரித்தான தமிழில் இயல்பாக காமெடி வேடங்களில் நடிகர் Soori ஐ பார்த்துள்ளோம். துணை கதாநாயகனாக படம் முழுவதும் ஹீரோவுடன் பயணிக்கும் பாத்திரங்களில் தன்னுடைய ஆற்றலை பக்குவமாக வெளிப்படுத்தி தமிழில் இப்போது மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

விடுதலை படத்தின் கதையை கேட்ட நடிகர் சூரி கதாநாயகன் பாத்திரத்தில் தன்னை கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்றும், இயக்குனர் வெற்றிமாறன் கடைசியாக தன்னுடைய பாத்திரம் பற்றி கூறியதும் சற்றே யோசனையோடு தான் ஒப்புக் கொண்டாராம். விடுதலை பாகம் 1ல் குமரேசன் என்ற பாத்திரத்தில் Soori-யின் நடிப்பும் அர்ப்பணிப்பும் ரசிகர்களால் மட்டுமின்றி திரைத்துறையில் பலரும் பாராட்டும் வகையில் இருந்தது. இந்த படத்தில் தன்னால் முடிந்த அனைத்தையும், தன்னிடம் எதிர்பார்க்கப்பட்ட அனைத்தையும் கடின உழைப்பால் திரையில் கொண்டு சேர்த்தார்.
படத்தின் கதை, நடிப்பு, ஆக்ஷன் என அனைத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக படத்தில் சூரி ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை நடிகராக இருக்கும்போதே தன்னுடைய சிக்ஸ் பேக் உடல்கட்டுக்காக பேசப்பட்டார். ஆனால் இளம் வயதில் தன்னுடைய தோற்றத்தை வைத்து பலர் அவரை இழிவாக பேசியதாக கூறும் நடிகர் சூரி, இப்போது ஆக்ஷன் காட்சிகள் மீது ஆர்வம் உள்ளதாகவும் கூறுகின்றார்.

விடுதலை பாகம் 1ன் ரிலீஸுக்கு முன் மற்ற நகைச்சுவை நடிகர்களான போல இவருக்கும் காமெடியை மையமாக வைத்து கதைகளில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் கிடைப்பதும் வந்தது. ஆனால் ஒருமையான, தீர்க்கமான முடிவாக அப்படிப்பட்ட கதைகளில் நடிப்பதை தவிர்க்கிறார் நடிகர் சூரி. கமர்ஷியல் கதைகளிலும் பெரிய நாட்டம் இல்லாத சூரி, தனக்கு ஒத்துப்போகும் பாத்திரங்களும், மக்களுக்கு பார்த்து ஏற்றுக்கொள்ளக்கூடிய படங்களை தேர்வு செய்யும் முனைப்புடன் உள்ளார். விடுதலை பாகம் 2ன் பரும்பான்மையான படப்பிடிப்பு முடிவடைந்ததாகவும், சில காட்சிகள் இயக்குனர் வெற்றிமாரனின் எதிர்ப்பார்ப்பை எட்டாததால் மீண்டும் படமாக்கப்பட்டுகிறது என்றும் இந்த நேர்காணலில் தெறிவித்துள்ளார்.

திரையில் எங்காவது ஓரமாக தெரிந்துவிட மாட்டோமா என்று ஏங்கிய நடிகர் Soori, தற்போது கதாநாயகனாக நடித்த மூன்று படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் காலம் வரை கடந்து வந்த பாதை நிகர் இல்லாதது. தீவிர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகனான நடிகர் Soori, தன்னுடைய இயர்ப்பெயரான ராமன்-ஐ ‘தளபதி’ படத்திற்கு பின் ‘சூரியா’ என்று மாற்றிக் கொண்டாராம். நாளடைவில் அதுவே Soori என மாறி இப்போது அவருக்கு புகழின் உச்சத்தில் அடையாளமாக மாறியிருக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]