சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். ‘Coolie’ என பெயரிடப்பட்டுள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏப்ரல் மாதம் படத்தின் டைட்டிலை வீடியோ வழியாக அறிவித்தனர். ஆக்ஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினிகாந்த் உடன் இணைகிறார்.

இந்த படத்தில் ‘மிஸ்டர் பாரத்’ படத்துக்கு பின் சத்தியராஜ்- ரஜினிகாந்த் உடன் நடிக்க உள்ளார். ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங் நடிப்பதாக இருந்தது, ஆனால் சம்பள பிரச்சனையால் நடிக்கவில்லை என தெரியவந்தது. படப்பிடிப்பு தாமதமாக இதுவே காரணம். இன்னும் படத்தில் மத்த கதாப்பாத்திரங்களில் நடிப்பது யார் என முடிவு எடுக்கவில்லை.
ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்கி ப்ரீ புரொடக்சன் வேலைகள் நடக்கவுள்ளது. இயல்பாகவே லோகேஷ் கனகராஜ் படம் என்றால் கொத்து கொத்தாக நடிகர்கள் இருப்பதால், கூலி படத்திலும் நடிப்பவர்கள் தேர்வும் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் கதையும் இந்த மாதத்துக்குள் முடிவாகும் என தெரிகிறது.
Action loaded #Coolie Title Reveal Teaser hits 10M+ views🔥 https://t.co/NEETHqoh0U@rajinikanth @Dir_Lokesh @anirudhofficial @anbariv @Dir_Chandhru #CoolieDisco pic.twitter.com/lZgBEVERBc
— Sun Pictures (@sunpictures) April 27, 2024
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜின் வெற்றி படங்களை கொடுத்த அனிருத் ரவிச்சந்திரன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். டிஸ்கோ டைட்டில் பாடல் வெளியாகி 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் டிரண்டாகியது.
சூப்பர் ஸ்டார் Rajinikanth நடிக்கும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். தன்னுடைய எல்லா படங்களிலுமே வில்லன் கதாபாத்திரத்துக்கு மிக முக்கியமான நடிகரை நடிக்கவைப்பது லோகேஷின் ஸ்டைல். அந்தவகையில் ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ படங்களில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைத்த லோகேஷ், ‘லியோ’ படத்தில் சஞ்சய் தத்தை வில்லனாக நடிக்கவைத்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தின் ‘கூலி’ படத்தில் நாகார்ஜுனாவை நடிக்கவைக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால், ‘’எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கேரெக்டராக இருந்தாலும் சரி, வில்லனாக நடிக்க விருப்பம் இல்லை’’ எனச்சொல்ல வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் நாகார்ஜுனா.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]