சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘Coolie’ படத்தின் படப்பிடிப்பு சுறுசுறுப்பாக நடந்துவருகிறது. இதற்கிடையில் இன்று இந்த படப்பிடிப்பில் முக்கியமான ஒரு சண்டை கட்சியை ரகசியமாக படம்பிடித்து Leak செய்துள்ளது பரபரப்பாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, சத்யராஜ், சுருதி ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாக்கி வரும் படம் தான் ‘Coolie’. ‘மாநகரம்’, ‘விக்ரம்’ படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை Lyca தயாரிப்பு நிறுவனத்தின் துணையுடன் இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் முக்கியமான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், நடிகர் நாகார்ஜூனா உடைய சண்டை கட்சி மற்றும் பிரமாண்டமான கட்சியின் வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. இந்த காட்சியை படப்பிடிப்பு நடக்கும்போது அங்கிருந்த யாரோ ஒருவர் ரகசியமாக படம்பிடித்துள்ளது தெரிகிறது.

தென்னிந்திய திரை துறையிலிருந்து முன்னணி நடிகர்களை இணைத்து உருவாக்கி வரும் ‘கூலி’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள எதிர்பார்ப்பை அறிந்து, இப்படி ரகசியமாக வீடியோ எடுத்து அதை பதிவிட்டுள்ளதுஹ் பலராலும் பாராட்டப்படாத செயலாக உள்ளது.
‘கூலி’ படத்தில் நடிக்கும் தென்னிந்திய சினிமா சூப்பர் ஸ்டார்கள்!
குறிப்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த வீடியோ Leak அனாதை பற்றி தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “இரண்டு மாதங்களாக நூற்றுக்கணக்கான நபர்களின் உழைப்பு இப்பொது வீணாகியுள்ளது. இப்படிப்பட்ட செயலை யாரும் செய்யவும் அட்டஹரிக்காமலும் இருங்கள் என கனிவாக கேட்டுக்கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
Two months of hard work by many people have gone in vain because of one recording.
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) September 18, 2024
I humbly request everyone not to engage in such practices, as they spoil the overall experience. Thank you.
15 நாள் கால்ஷீட் 10 கோடி சம்பளம்… ‘Coolie’ படத்தில் Sathyaraj!
ஒரு படத்தை உருவாக்க, பல மாதங்களாக ஆயிரக்கணக்கான கலைஞர்கள் ஒன்று சேர்ந்து உழைப்பது தெரிந்தும், இப்படி ரகசியமான விடியோக்கள் இணையத்தில் பரவிவருவது கண்டிக்கத்தக்க செயல் ஆகும். அதிலும் மாபெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படியான முன்னணி ஹீரோக்களின் படங்களை ரசிகர்களுக்கு திரையிடும் முன்னர் பகிர்வது அவர்களின் எதிர்பார்ப்பை குறைக்கிறது.
Don't miss out on the Latest Updates! Join our official WhatsApp channel and follow us on, YouTube, Instagram, Facebook, and Twitter for Breaking News. Send your press releases to: [email protected]